குழந்தைகள் நகம் கடிப்பது ஏன்?
  • 13:59PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:59PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்று மட்டும் அல்ல..பல வருடகாலமாகக் குழந்தைகளிடம் நாம் பார்க்கும் கூறும் ஒரு கெட்ட பழக்கம் விரலில் உள்ள நகம் கடிப்பது.! நாம் பலமுறை கூறினாலும் குழந்தைகளால் இந்தப் பழக்கத்தை நிறுத்தமுடியாது.! வளரும் குழந்தைகளுக்கு  இது ஒரு பழக்கமாக மாறிவிடும்.! நாம் குழந்தைக்கு என் இந்தப் பழக்கம் வருகிறது எப்படி வந்தது என்று யோசித்தால் குழந்தையை வெளியில் அனுப்பவே சற்று சிந்திப்போம்! ஆனால் அவ்வாறு  பயப்படாமல் நாம் நமது குழந்தைக்கு அந்தப் பழக்கத்தை நிறுத்தவும்,அதனால் வரும் துன்பங்களை புரியவைத்தல் குழந்தைகளே விட்டுவிடுவார்கள்.!!

குழந்தைகளுக்கு ஏன் இந்தப் பழக்கம் வருகிறது என்று கவனித்தால்,கை சூப்பும் பழக்கத்திலிருந்து இந்தப் பழக்கம் வந்துவிடுகிறது.!அது தவிர குழந்தைகள் வீட்டில் சும்மா பொழுது போகாத நேரங்களில் நகம் கடிக்க ஆரமித்துவிடும்.வளர்ந்த குழந்தைகள்,பள்ளியில் கூட படிக்கும் மாணவர்களிடமிருந்து இந்தப் பழக்கத்தை பார்த்துக் கற்றுக்கொள்கின்றனர்.சில சமயம் வெட்கம்,கவலை,பயம் போன்ற காரணத்தாலும் இந்தப் பழக்கம் அவர்களிடம் வர அராமிக்கும்.!

இந்தப் பழக்கம் பெரிய குற்றமல்ல! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிரட்டல் தன்மையாக இதனால் வரும் விளைவுகளைப் பற்றி எடுத்துக் கூறினால் அவர்களே புரிந்து கொள்வார்கள்.!குழந்தைகள் இந்தப் பழக்கத்தை விட நம் முன்னோர் நமக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு வழியைப் பின்பற்றலாம்! அது வேறொன்றும் இல்லை,குழந்தைகள் இரவில் தூங்கும்போது அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் விரலில் வேம்பு எண்ணெய்  மற்றும் பாவைக்காய் ஜூஸ்யை தடவி விடுங்கள்,கசப்பு தன்மையினால் அவர்களே விரலை வாயில் வைப்பதை  மறந்து விடுவார்கள்.!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top