ஏன் பதில் இல்லை? - நாத்திகர்களின் கேள்விகள்!
  • 11:52AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:52AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஏன் பதில் இல்லை? - நாத்திகர்களின் கேள்விகள்!

கடவுள் மீது அதிகமான நம்பிக்கை கொண்டவர்களை  “ஆத்திகவாதிகள்” என்றும் அதையே ,நீங்கள் நம்பும் கடவுள் யார்? என்று கேட்பவர்களேநாத்திகர்கள்”.. இவ்வாறு  நம் மதத்தை பற்றி பேசுபவர்களை பிரித்து வைத்துள்ளோம்.

67c6708e4ed513e2a955abe85170eec8.jpg

நாத்திகர்கள் கடவுள் இருப்பதற்கு அறிவியல் சான்று கேட்பதில் தவறொன்றும் இல்லையே !,அதற்கு ஆத்திகர்கள் கூறும் அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை..சாமானிய மக்கள் ஆன்மிகத்தை கண்ணைமூடிக்கொண்டு நம்புவதால் தான் நம் நாட்டில் அவ்வளவு ஏமாற்று சாமியார் கூட்டம் இன்று சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்!!!

 

நாத்திகர்கள் கூறும் சிலவற்றை இன்றும் எந்த மதவாதிகளும் ஏற்கவும் இல்லை அதற்கு விடையும் தரவில்லை ..அவற்றில் சில கேள்விகள் நம்மை யோசிக்க வைக்கின்றன ...

 ஒரு சில  நாத்திகவாதி  கேட்ட கேள்வி இது ...இறைவன் சைவம் என்று கூறும் நீங்கள் என் மாட்டு ரத்தத்தில் இருந்து வரும் பாலை அந்த இறைவன் மீது ஊற்றுகிறீர்கள்?? காட்டில் சுற்றி திரிந்த சிவபெருமான் எப்போது பூணூல் போட்டுக்கொண்டார்??

image (2).jpg

நம் புராணங்களில் காவியங்களில் கண்ட எல்லாம் துறந்த துறவிகள்,சாமியார்கள்,கடவுளுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்கள் எவரும் தனக்கென்று தனி சொத்தோ, நிலமோ வைத்துக் கொண்டது இல்லையே?? இப்பொழுது உள்ளவர்கள்,தன்னை சாது,துறவி,தான் மீது இறைவன் இருக்கிறார் என்று கூறுபவர்கள் அப்படி இல்லையே...!?!

 

சமண மதத்தை கிழக்கேசிய நாடுகளில் பலர் வழிபடுகின்றனர்,ஆனால் அந்த நாடுகளில் தானே பல பிரெச்சனைகள் வருகின்றன...!!??

பெண்ணியம் பற்றி பேசும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் பெண்களுக்கு சம உரிமை தருவதில்லை?!

கிறிஸ்துவ சகோதரர்களே!! மற்ற மத பிரச்சாரத்தை  விட உங்கள் மத பிரச்சாரம்  ஏன் அதிகமாக உள்ளது??  மற்ற மதத்தைக்  காட்டிலும்  ஏன் உங்கள் மதத்தை முதன்மை  படுத்திக் கொள்கிறீர்கள்??

wp_ss_20161010_0002.jpg

மழை தரும் காட்டை அழித்துச் சிலை வைக்கும் சிலர் நதிகளை இணைக்க நடைப்பயணம் மேற்கொள்வது வேடிக்கையாக இல்லையா ??

இக்கேள்விகளுக்கு இன்னும் பதிலும் வர வில்லை, மத சொற்பொழிவாற்றும் ஞானிகள் யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை...!!! 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top