#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி??? ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது!!!
  • 19:37PM Sep 18,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:37PM Sep 18,2019 Chennai

வழக்கமாக அனைத்துத் துறைகளிலும் ஏற்ற இறக்கங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டித்தான் எல்லாத் துறையும் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. ஆனால், பொருளாதாரச் சரிவு என்றால் ஏன் அனைத்து துறைகளும் ஒட்டுமொத்தமாகச் சரிகிறது என்று தெரியுமா??? அதற்கு நீங்கள் ஒரே ஒரு வர்க்கத்தை மட்டும்தான் சொல்ல முடியும் CONSUMERS. நடுத்தர, ஏழை மக்கள் அதிகமுள்ள இந்தியாவில் AUTOMOBILE போன்ற துறைகள் மட்டும் சரியாமல், BISCUIT விற்பனை வரை எப்படிச் சரிகிறது என்று பார்க்கலாமா??? பொதுவான காரணத்திலிருந்து பார்க்கலாம்.

பெரிய துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கெனவே VRS, TEMPORARY ஊழியர்கள் பணி நீக்கம் என்று லட்சக்கணக்கில் வேலை இழந்துள்ளனர். புதிதாகப் படித்துவிட்டு வேலை தேடுபவர்களும் கூடிக் கொண்டு போகிறார்கள். இது மக்களின் மனதில் அச்சத்தை விதைத்து தங்களின் செலவினங்களைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தத் தூண்டுகிறது. இனிதான் முக்கியமான விஷயம். பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் SHARE MARKET VALUE-வும் அடிபடும். இதனால், ஏற்கெனவே நட்டத்தில் இருக்கும் நிறுவனத்தின் முதலீட்டிலும் பிரச்சினை என்று வரும் போது, வேறு வழியின்றி அவர்களும் செலவைக் குறைக்க ஆரம்பித்துவிடுவார்கள். AUTOMOBILE போன்ற பெரிய INDUSTRY-கள் தனியாகச் செயல்படுவதில்லை. அதிலிருக்கும் NUT, BOLT முதற்கொண்டு அனைத்து உதிரிபாகங்களும் ஒவ்வொரு இடத்தில் தயாராகி வரும்.

இது அத்தனையும் அந்த ஒரு நிறுவனம் சார்ந்ததல்ல என்றாலும், அந்த நிறுவனம் மூடப்படும் போது, கீழே உள்ள நிறுவனங்களுக்கும் வருமானம் குறைந்து முதலீட்டுப் பிரச்சினை ஏற்படும். இது அவர்களுடைய தொழிலாளர்களைப் பாதிக்கும். நேரடியாக இல்லாவிட்டாலும், ஒரே முதலாளி லாபத்தில் ஒரு நிறுவனத்தையும், நட்டத்தில் ஒன்றையும் வைத்து நடத்தினால், லாபம் தரும் நிறுவனமும் சேர்ந்து பாதிக்கப்படும். தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் வாங்குவதைத் தவிர்க்க ஆரம்பிக்கிறார்கள். மீண்டும், மீண்டும் முதலில் இருந்து இந்த சுழற்சி நடந்து மீளவே முடியாத நிலைக்குத் தள்ளி விடுகிறது. இப்போதாவது புரிகிறதா, பொருளாதாரச் சரிவு என்பது நம்மைப் பாதிக்காது என்று எவராலும் இருக்க முடியாது. சுழற்சி முறையில் நிறுவனங்கள் குறையக் குறைய ஒவ்வொரு துறையாக அனைத்துமே அடிவாங்கத் தொடங்கிவிடும். இன்றைய நிலையில், இதைச் சரி செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்குமே இருக்கிறது. புரிந்தால் சரி!!!

Market Crash Signal  |  Indian Food Economy  |  Blue Economy Alert  |  Economy Versus Business   |  Nations Economy  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top