யார் அந்த அதிர்ஷ்டக்கார சுயேட்சை???
  • 10:50AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:50AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நிரம்பவுமே ஆதங்கத்தில் இருக்கும் விஷால், இப்போது தன்னைப் பார்த்து எதற்குப் பயப்படுகிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.  நெகட்டிவ்வாக பேசிப் பப்ளிசிட்டி கொடுப்பதில் தற்போதைய ஆளுங்கட்சி மிகவும் தேறி வருகிறது.  விஷால் வேட்பு மனு விஷயத்தில் சில சந்தேகங்கள் எழுந்தாலும் அது வேறு Topic.  தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, அவர் கோர்ட்டுக்குப் போனால் நீதி கிடைக்கும்தான். ஆனால், அது எப்போ கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்பதற்கெல்லாம் ஒரு கியாரண்டியும் கிடையாது.  விஷாலைப் பார்த்து பயப்பட்ட கட்சி, இப்படித்தான் எண்ணியிருக்கும்.

கோபத்தில் இருந்த விஷாலோ, நான் ஒரு சுயேட்சையை ஆதரிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு பெரிய ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். முதலில் விஷால் ஒரு பிரபல சுயேட்சை அவ்வளவுதான்.  போட்டியிட்டிருந்தாலும் பெரிதாக எதுவும் நடந்திருக்குமா என்பது சரியாகத்  தெரியவில்லை.  ஆனால் இப்போது, ஆளுங்கட்சியின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டவர். முக்கியமாக பணம் இருக்கும், மக்களை என்டர்டெய்ன் பண்ணத் தெரிந்த, அதே சமயம் அரசு தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகத் தார்மீக அடிப்படையில் கோபத்துடன் இருக்கும் நபர்.  ஈகோ விளையாட ஆரம்பித்துவிடும்.  இதற்காக விஷால் எந்த அளவுக்கும் போகத் தயாரானால், அவரே நின்றிருந்தால் வாங்கியிருக்கும் வாக்குகளை விட இப்போது அதிகமாக வாங்கும் வாய்ப்பு இருக்கும்.

என்ன ஒன்று, இப்போது எந்த சுயேட்சை மீது இந்தக் காற்று வீசப்போகிறது என்பதுதான் பெரிய கேள்வி.  அந்த கொடுத்த வைத்த மகராசன் யார் என்பதுதான் இப்போது மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  நமக்கும்தான்… யாருங்க அந்த அதிர்ஷ்டக்கார சுயேட்சை???    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top