#Spiritual : நம்மை படைத்த பிரம்மா யார் ?
  • 13:07PM Jun 18,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 13:07PM Jun 18,2019 Tamil Nadu

கடவுளை பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் ஒரு நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது. இந்து மத கடவுள்களில் மும்மூர்த்திகள் என்று அறியப்படும் பிரம்மர், விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகும் இதில் பிரம்மா  படைக்கும் கடவுளாகவும், விஷ்ணு பகவான் காக்கும் கடவுளாகவும், சிவபெருமான் அழிக்கும் கடவுளாகவும் இருக்கிறார்கள்.இதில் பிரம்மா  என்ற பெயருக்கு சம்ஸ்க்ருதத்தில் வளர்ச்சி, விரிவு மற்றும் படைப்பு என்பது பொருளாகும். இந்த வழியில், பிரம்மா  படைக்கும் கடவுளாக அறியப்படுகிறார். இந்த பிரபஞ்சம் முழுவதையும், அதில் வாழும் எல்லா உயிர்களையும் பிரம்மா  படைத்திருக்கிறார்.

brahma1.jpg

பிரம்ம தேவரின் மனைவி சரஸ்வதி தேவி,ஆவார் சரஸ்வதி தேவி  அறிவு மற்றும் ஞானத்தின் கடவுளாக விளங்குகிறார்.இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு வடிவங்களில்  ஒவ்வொரு அவதாரம் எடுத்து படைத்து, பின் மீண்டும் நாராயணனுக்குள் கரைந்து விடுவார் பிரம்மர் . நாராயணர் என்பவர் படைக்கவும் முடியாத அழிக்கவும் முடியாத பரம்பொருள் ஆவார்.

Brahma.jpg

இவரின் உருவம் நான்கு முகம் மற்றும் நான்கு கைகளைக் கொண்டதால்  இவரை சதுர்முகன் என்றும் அழைப்பார்கள். பிரம்ம தேவரின் நான்கு முகங்களும் நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இவர் அணிந்திருக்கும் விலங்கு தோல் தீவிரத்தைக் குறிக்கிறது.  இவருடைய நான்கு கைகளில் ஒரு கையில் கமண்டலத்தைக் கொண்டிருக்கிறார். அது சந்நியாசத்தின் அல்லது துறவறத்தின் சின்னமாகும்.

brahma-vishnu-maheshwara.jpg

இந்த பிரபஞ்சத்தில் பிரம்மதேவரை தவிர மற்ற எல்லா உயிர்களும் படைக்கப்பட்டு சில காலம் காக்கப்பட்டு பின்பு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிக்கப்பட்டு மற்றொரு வடிவத்தில் மறுபடி புதுபிக்கப்படுகிறது. இப்படி இந்து மதம் மறுபிறவி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.படைக்கும் கடவுளாக இருந்தாலும், விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமான் போல் இவரை பரவலாக வழிபடுவது கிடையாது. பிரம்மருக்கு என்று இந்து மதத்தில் ஒரு தனித்துவம் இருந்தாலும், விஷ்ணு மற்றும் சிவபெருமானுடன் ஒப்பிடும்போது பிரம்ம தேவருக்கு சில ஆலயங்கள் மட்டுமே பூமியில் உள்ளது.இதற்கு ஒரு புராண கதை உள்ளது அதை மற்றொரு பதிவில் பார்க்கலாம்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top