Highrise

கோடியில் சம்பளம் வாங்கியவரை ஒரே நாளில் பிளாட்ஃபார்ம்க்கு இழுத்துவிட்ட ஏழரை! இப்படியும் நடக்குமா?

Sep 26 2021 01:03:00 PM

54 ஆவது வயதில் சற்றும் எதிர்பாராத மிகப்பெரிய சறுக்கல், அவமானம், து க்கம், து ரோகம் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு ஒருவர் வேலைக்கான நேர்காணலில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு ஒரு கோப்பையில் தேநீர் கொடுக்கப்பட்டது. அந்த கோப்பை கீறல் வீழ்ந்து, கோப்பையை சுற்றி தேநீர் தெறித்து  இருந்தது. பார்க்கவே அருவெறுப்பாக இருந்துள்ளது. அதனை பார்த்ததும் அவர் தான் முன்பு எப்படி இருந்தோம் என நினைவு கூர்ந்து பார்க்கிறார். 

Lee-iacoco ford

இந்த நேர்காணலுக்கு வருவதற்கு சரியாக 24 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு பெரிய அறை, வெள்ளை சீருடை அணிந்த வேலையாட்கள், அவர் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவர் சொல்வதை செய்ய காத்துக்கிடந்தார்கள். அவருக்கு தேநீர் வேண்டும் என்றால், ஒரு கண் காட்டினாலே போதும், பளிச்சென்ற வெள்ளை நிறக்கோப்பையில் சுடசுட தேநீர் பரிமாறப்படும். ஆனால் இவை அனைத்தும் ஒரே நாளிலேயே மாறி விட்டன. இப்படி வாழ்க்கையில் திடீரெனெ தூக்கி வீசப்பட்டவர் தான் லீ இயாகோகோ. இவர் ford கம்பெனியின் முதுகெலும்பாக இருந்தார். அங்கு முதலாளியை விட இவர் தான் பிரபலம். இதனால் இவரது முதலாளி இவரை இந்த அல்ப விஷயத்திற்காக வேலையை விட்டே தூக்கி விட்டார்.

Lee-iacoco ford

ஒரு முதலாளி எப்படி முதுகெலும்பாக இருந்த ஒருவரை தூக்கி எறிவார் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உண்மையில் அதை செய்தது முதலாளியான ஹென்றி போர்டின் மகன் இரண்டாம் போர்ட். லீ இயாகோகோ இருந்த போது, கம்பெனி உச்ச நிலையில் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட போர்ட் இவரை வேலையை விட்டு தூக்கிவிட்டார். மனம் உடைந்த லீ நம்பிக்கையுடன் இன்னொரு கம்பெனிக்கு நேர்காணலுக்கு வந்தார். அப்போது கடனில் மூழ்கி கிடந்த chrysler என்ற நிறுவனம். இவர் சேர்ந்த பின்பு லாபம் ஈட்ட தொடங்கியது. 

Lee-iacoco ford

பின்பு 2014ல் fiat நிறுவனம் chrysler நிறுவனத்தை வாங்கியது. மூடப்போகும் நிலையில் இருந்த chrysler நிறுவனம் மூன்றாம் இடத்திற்கு வந்தது. இன்று வரை fordஐ விட fiat நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், தன் மீது முழு நம்பிக்கை கொண்ட லீ இயாகோகோ chrysler நிறுவனம் கடனில் இருந்து மீளும் வரை 1 ருபாய் தான் சம்பளமாக பெற போவதாக கூறினார். அதை நிறைவேற்றியும் காட்டினாராம். வர்த்தக துறையில் காணமால் போக இருந்த chrysler நிறுவனத்தை முதல் மூன்று இடத்திற்குள் கொண்டு வந்த பெருமை லீ இயாகோகோ அவர்களையே சேரும். இந்த ஊக்கமிக்க வரலாற்றை படிக்கும்போது, ஒரு விஷயம் புரிகிறது. நம்மீது நம்பிக்கை இருந்தால் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்ளலாம்.