வெள்ளைதான் அழகின் நிறமா!!!
  • 12:33PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:33PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

TV-ல எங்க பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் வெள்ளை வெள்ளை, வெள்ளை வெள்ளைதான்.  விளம்பரங்களிலும்கூட, இதைத் தேய் சிவப்பாய்டலாம், இதை பண்ணினா நிறம் மாறலாம்னு காட்டிட்டே இருக்காங்க… இந்தியனின் சராசரி நிறம் பிரவுன்.  அப்புறம் எப்படி வந்துச்சு இப்படியொரு வெள்ளைப் பைத்தியம்??? உண்மையிலேயே அந்த நிறம்தான் உசந்ததான்னு நிறைய கேள்வி… கருப்பான பெண்களோட குற்ற உணர்ச்சியையும், தாழ்வு மனப்பான்மையையும், அதிகப்படுத்தனும்னா ஒரு மணி நேரம் நம்ம தொலைக்காட்சி விளம்பரங்களைக் காட்டினாலே போதும். 

இந்தியால நாம எல்லாரும் எப்பவும் வெள்ளையா இருந்ததில்லை. உணவுப் பழக்கம், சீதோஷ்ண நிலை காரணமா ரெண்டு மூணு மாநிலங்களில் சற்று தோல் வெளுத்திருந்தது உண்மைதான்.  3000 வருஷம் முன்னாடி வந்து, நம்மளை சாமி பயம் காட்டி அடிமைப்படுத்தின ஆரியர்களின் நிறம் வெள்ளை.  அடுத்து வந்து நம்மளை ஆண்டு அடிச்சவனும் வெள்ளைதான்.  இதுவே நம்ம ஜீன்ல வெள்ளையா இருந்தா, நாம பெரிய ஆளுங்கிற நினைப்பைக் கொடுக்க ஆரம்பிச்சது.  என்கிட்ட ஒரு பெண், “வெள்ளையா இருந்தா, நம்ம தன்னம்பிக்கை அதிகமாகும்”னு சொல்லும்போது, நான் சத்தியமா சிரிச்சுட்டேன்.  கொஞ்ச நேரம் கழிச்சு அவங்ககிட்டயே “உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்”னு கேட்டேன். “ப்ளாக்…” என்று திமிராக சொன்னார்கள். “எதனால்??” என்று திரும்பக் கேட்க, “ப்ளாக் இஸ் எ மெஜஸ்டிக் கலர்…” என்று சொல்கிறார்கள். மீண்டும் சிரித்துவிட்டேன்.

வெள்ளையாக இருப்பது பெருமை என்று நினைக்கும் அவரேதான் கருப்பு ஒரு ஆளுமை வாய்ந்த நிறம் என்றையும் சொல்கிறார்.  எதற்கு இந்தக் குழப்பம்.  அவுட் ஆப் கேரக்டர் என்று சொல்வார்கள். என் இயல்பு தாண்டி நான் இருந்தால் எனது முடிவுகளில் ஏற்படும் குழப்பத்தை குறிப்பது இது.  இதன் இன்னொரு காரணம் சினிமா.  முதலில் சினிமாவில் ஏன் வெள்ளை நடிகர்களை நடிக்க வைத்தார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  ஆரம்ப காலத்தில் வந்த படங்கள் கருப்பு வெள்ளைப் படங்கள், உள் அரங்கில் எடுக்கப்பட்டவை. அப்பொழுது லைட்டிங் பற்றிய அறிவு அளவாக இருந்ததாலும், உபகரணப் பற்றாக்குறைவின் காரணமாகவும் தெளிவாகத் தெரிய வேண்டி வெள்ளையான சருமம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.  பின்னர், வெளியில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போது ஓவர் எக்ஸபோஷர் அதிகமாகத் தெரிந்திருக்கும். சார்லி சாப்ளினின் பல படங்களில் அவர் முகமும், சுவர்களும் ஒரே மாதிரியாகத் தோன்றும்.

இது மட்டுமல்லாமல் சினிமா தன் பார்வையை மாற்றும் போது, மக்களைத் திரையரங்கிற்கு வர வைக்க அவர்கள் பார்க்காத விஷயங்களைக் காட்ட முனைந்தனர். அப்படித்தான் நம் கருப்பு தேசத்திற்குள் வெள்ளையின் ஆதிக்கம் வளர்ந்தது. நமக்கும் நாம் தூர இருந்து பார்த்த வெளுத்த தோலை அருகே பார்த்ததன் விளைவாக ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. ஆண்டவர்களும் வெள்ளை, திரையரங்கினுள் பிரம்மாண்டமாய்க் காட்டப்படும் நடிகர் நடிகைகள் வெள்ளை எனப் பார்த்து பார்த்து நமக்கும் வெள்ளை உயர்ந்தது என்று எண்ணம் ஏற்பட்டதில் ஆச்சரியமேதும் இல்லை. விளைவு காமிகள் கூட கருங்கல் தாண்டி பளிங்குக் கற்களில் செதுக்க ஆரம்பித்து விட்டோம்.

உண்மையில் கருப்பின் மதிப்பு என்ன???

எதற்கு வார்த்தைகளை வீணடித்துக் கொண்டு… நீங்களே பார்த்துக்கோங்க…     

Top