எது உங்கள் தைரியம்??
  • 06:56AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 06:56AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

எது உங்கள் தைரியம்??

நாம ஒருத்தர பத்தி புகழ்ந்து பேசரப்ப,அவங்களுடைய குணத்தைத்தான் பெருமைபடுத்திப் பேசுவோம்,அந்தமாதிரி பேசறப்ப நாம முக்கியமா அவங்க தைரியத்தைச் சொல்லித்தான் பெருமை பேசுவோம்..!

 

மனுஷனுக்குத் தைரியம் ரொம்ப முக்கியம்.அது இல்லனா இந்த உலகத்துல இருக்க எல்லாரையும் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.. ஏன் அப்படி சொல்றேன்னா ,தைரியம் சும்மா பேய் பார்த்து பயப்படாம இருக்கறது ,பாம்பு கையில் பிடிக்கிறது,மல்லு கட்டுறது மட்டும் இல்லைங்க.!ஒரு பிரச்னைனு வரும்பொழுது அத எப்படி புத்திசாலிதனம சமாளிக்கிறது.,புலியே கடிக்க வந்தாலும்,தன்னையும் தன்  கூட இருக்கவங்களையும் எப்படி காப்பாத்தறதுல தன் இருக்கு.. புத்திசாலிதனம் இல்லாத தைரியம் மடத்தனம்தான்...

 

தைரியம் உள்ளவங்க இரெண்டு விதமா சொல்லலாம் ஒன்னு நாய் தைரியம் இன்னொன்னு பூனை தைரியம். ஒரு எடுத்துக்காட்டுக்கு ஒன்னு சொல்றேன் !...நாய் தைரியம் சொல்றது அரசியல்வாதி,போலீஸ்காரங்க கிட்ட இருக்கறது..பதவி, பணம்னால இருக்க தைரியம்..இது எப்படின்னா நம்மகிட்ட செல்வாக்கும் பணமும் இருக்கு,, யார் நம்மகிட்ட மோதுவனு நினைக்கற தைரியம்...நாய் பூனையை  தொரதராபா இருக்க திமிரான தைரியம்.! பூனை தைரியம் சொல்றது,நம்ம மக்கள் தான்.! பூனை ஒரு மூலைல மாட்டிக்கிட்டா வேற வழியே இல்ல எதிர்த்து நிப்போம்,என்ன  ஆய்டும்னு  நிக்கும்...அதுகூட மோதுற நாய்க்கு தான் அடிபடும்..நீங்களே பலர் பதிருப்பிங்க! அதே மாதிரிதான் நம்ம மக்களும் தன்னோட பொறுமையை   சோதிக்கறப்ப அவங்கள அடக்கறது ரொம்ப கஷ்டம்..கடல்(மெரீனா) போல கூடுவாங்க அவங்க உரிமையை அழிக்க நினைக்கறப்ப !!

 இத ஏன் இப்போ சொல்றேன்னா!? நாம உரிமையை அதுவும் சிலர் எதிர்காலத்துக்காகத் தைரியமா நின்று கேள்விகேக்கறதுல தப்பு சுத்தமா இல்ல !!! 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top