#Rajini : சூப்பர் ஸ்டார் 40 முறை பார்த்த படம் எது தெரியுமா?
  • 00:42AM Nov 09,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:42AM Nov 09,2019 Chennai

உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்த நாள் கடந்த நவ 7 ஆம் தேதி அவரின் பிறந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை திரு ஸ்ரீனிவாசன் சிலையை திறந்து வைத்து கொண்டாடினார் பிறகு நேற்று நவ 8 அன்று  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் மற்றும் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கமல்ஹாசன் எனது கலை உலக அண்ணன்.

kamal 1.jpg

கே.பாலசந்தர் கமலுக்கு மட்டுமல்லாமல் என்னை போன்ற பலருக்கும் தந்தையாக இருந்தவர். அவர் ஒரு பிதாமகன்,பலருக்கும்  குருவாக இருந்தவர்.என்று மறைந்த திரு பாலசந்தர் பற்றி பேசினார்.பிறகு தனது நண்பன் கமலஹாசன் குறித்து பேசுகையில் அவர் அரசியலுக்கு வந்தாலும் தாய்வீடான சினிமாவை விடமாட்டார். கலையை உயிராக நினைப்பவர். தேவர்மகன் படம் சினிமாவின் காவியம். அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு உடனே கமலின் வீட்டிற்கு சென்று பாராட்டினேன்.

rajini 3.jpg

ஹே ராம் படத்தை 30 முதல் 40 முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்.காட்பாதர் படங்களை அதிக தடவை பார்த்திருக்கிறேன். தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே விக்ரம் படத்தை சிறப்பாக இயக்கினார். அதை எண்ணி நான் வியந்தேன் என கமல்ஹாசனை பாராட்டியுள்ளார்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top