ஊழல் எங்கிருந்து துவங்குகிறது???
  • 06:45AM Sep 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:45AM Sep 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று பேசாத ஆளில்லை. கமலஹாசன் ட்விட்டர் பதிவுகளை அவரின் அரசுக்கு எதிரான போக்குக்காகவே பலபேர் பார்க்கத் துவங்கிவிட்டனர்.  ஒரு சிறு செடி கூட சற்றே வளர்ந்துவிட்டால், பிடுங்க முடியாது – வெட்டித்தான் அப்புறப்படுத்த முடியும்.  அதனால்தான் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற பழமொழியே வந்தது.  அப்படியென்றால் பெருமரமாக வளர்ந்து கிளை பரப்பிய இந்த ஊழலை ஒழிக்க நாம் முதலில் அதனுடைய ஆணி வேரை ஆராய வேண்டும்.  எங்கிருந்துதான் துவங்குகிறது இந்த ஊழல்???

உண்மையைச் சொல்வதானால் நம்மிடம் இருந்துதான் துவங்குகிறது.  வண்டி டயருக்கு காற்றுப் பிடிப்பது துவங்கி, லஞ்சம் கொடுப்பதுவரை நாம் செய்வது அனைத்தும்தான் ஊழலின் ஆரம்பம்.  ஊழல் மலிந்த தேசத்தில் நாம் இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்வதும் ஊழலின் ஆரம்பம்தான்.  இந்த நம்பிக்கைதான் உங்களைப் பணம் கொடுத்துக் காரியங்களை சாதித்துக் கொள்ளத் தூண்டும்.  என்றாவது, என்றாவது யோசித்திருக்கிறீர்களா- கேஸ் விலை என்ன என்று நமது செல்லிடப் பேசியில் தகவல் வந்தபின்னும், நாம் எதற்கு குறைந்த பட்சம் 60 ரூபாயாவது அதிகம் கொடுக்க வேண்டும் என்று???

இதில் தற்போது அரசு கொண்டு வந்துள்ள தட்கல் முறை போன்றவையும் ஊழலுக்கு ஒரு அங்கீகாரம் போலத்தான்.  மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்தவனும், 30 மணி நேரத்திற்கு முன் பதிவு செய்தவனும் - அவர்கள் செலுத்திய சிறு தொகை வித்தியாசத்தால் சமமாகி விடுவார்களா??? தெய்வ தரிசனத்தில் கூட ரூபாய் 500-க்கு சிறப்பு டிக்கெட் கிடைக்கும் நிலையில் ஊழலை என்ன செய்ய??? அவ்வளவு ஏன் துணி இஸ்திரி போடும் இடத்தில்கூட சீக்கிரம் வேண்டுமென்றால் அதிகத் தொகை செலுத்த வேண்டும்…

இவ்வாறு நாமே சில்லறையாக ஆரம்பித்து, பின்னர் பத்திரப் பதிவுகளில் விலை வித்தியாசத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க என மெதுவாக மரமாகி இன்று இவ்வளவு பெரிய மரமாக வேர்விட்டுக் கிளை பரப்பு வருகிறது ஊழல்.  ஊழலை ஒழிக்க ஒரே வழியில் மட்டுமே முடியும்.  திருந்து அல்லது திருத்தப்படு…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top