#sugar : அட்ரா சக்க.! சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.?
  • 21:23PM May 24,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:23PM May 24,2019 India

வெள்ளை சர்க்கரை எந்த சத்தும் இல்லாத வெறும் Empty Calories கொண்டது. அதனை முற்றிலுமாக நிறுத்திவிட்டோமேயானால் நமது உடல் அதற்கேற்ப தன்னை தானே சரி செய்து கொள்கிறது. அதனால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நிகழும் என்பதை பார்க்கலாம்.

#1. சர்க்கரையை உடனே நிறுத்திவிட்டால் சிறிது நாட்களுக்கு இனிப்பின் மேல் உள்ள ஆர்வம் மிகுந்த அளவு அதிகரிக்கும்.

#2. முதலில் இரண்டு நாட்களுக்கு தலைவலி, மந்தம், உற்சாகமின்மை போன்ற சில அறிகுறிகள் தென்படும். அதனை எல்லாம் கடந்துவிட்டால் ரத்த அழுத்தம் சசீராக நடைபெறும். Inflammation படிப்படியாக சரியாவதால் இதயம் நலம் பெறும்.

#3. இரத்தத்தில் சர்க்கரை இருப்பதனால் தமனியின் சுவற்றில் உருவான அழற்சி மற்றும் அதில் படிந்துள்ள சில கெட்ட கொழுப்பு தான் ஹார்ட் அட்டாக் வர காரணமாகின்றன. உடலில் கெட்ட கொழுப்பு உடலில் சேர சர்க்கரை பெரும்பங்கு வகிப்பதால், சர்க்கரையை நிறுத்துவதினால் இதை தவிர்க்கலாம்.

#4. அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதய துடிப்பு சீராக இல்லாமல் அதிகரித்து காணப்படும் தன்மை சர்க்கரையை நிறுத்துவதால் படிப்படியாக மேம்படும் என ஆய்வுகள் கூறியுள்ளன.

#5. உடலில் அதிகமாக இருக்கும் சர்க்கரை கொழுப்பாக மாற்றமாகி உடலில் சேமிக்கபடுகிறது. இதனால் உடல் பருமனுக்கு சர்க்கரையும் ஒரு காரணமாக அமைகிறது.

#6. சர்க்கரையை குறைப்பதால் Cognitive function எனப்படும் மூளையின் செயல் திறன் அதிகரிப்பதாகவும் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

#sugar: கூடுமானவரை சர்க்கரை உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் உடலில் உற்சாகம் அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சீராகதெரியவந்துள்ளது.

Share This Story

முருகானந்தம்

Top