#WhatsApp bug: வாட்ஸ்ஆப்பில் படம் அனுப்பறீங்களா? உங்க மொபைலுக்கு சூனியம் வைக்க வைத்திருக்கும் GIF!
  • 21:29PM Oct 04,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:29PM Oct 04,2019 India

WhatsApp-ல் GIF இமேஜ் அனுப்பும் போது, குறிப்பாக antroid போனிலிருந்து அனுப்பும் போது ஒரு வகையான ‘bug’ ஒன்று இருப்பதை ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இந்த ‘bug’ மூலம் பயனாளரின் செல்போன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு  ‘bug’ என்பது ஒரு செயலி உண்டாக்கும் போது ஏற்படும் பிழையை குறிக்கிறது.

மெசேஜ், இ-மெயில், அல்லது இதர App மூலமாகவும் WhatsApp GIF டவுன்லோடு செய்த ஒரு பயனாளரின் சுயதகவல்களை ஹேக் செய்ய முடியுமாம். டெக் ஆய்வாளரான Awakened என்பவர் இந்த ‘bug’ குறித்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த அபாயத்திலிருந்து மீள WhatsApp version 2.19.244 அல்லது அதற்கு மேம்பட்ட அம்சத்துக்கு அப்டேட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வாளர் WhatsApp நிறுவனத்துக்கு  கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள WhatsApp, “தற்போது வரையில் தாக்குதலுக்குரிய ‘bug’ குறித்து எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை. எந்தவொரு புகார்களும் வரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக facebook-கில் தான் அதிகப்படியான bug கண்டுபிடிக்கப்படும் நிலையில், தற்போது WhatsApp bug கண்டறியப்பட்டது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சில நேரங்களில் இது போன்ற குறையை சரியான நேரத்தில் கண்டுபிடித்து கூறும் திறமைசாலிகளுக்கு பேஸ்புக் நிறுவனம், சன்மானம் வழங்கும். இந்த விவகாரமும் பெரிய அளவில் பிரச்சனையை கொண்டு வரும் தொழில்நுட்ப குறைபாடாக இருந்தால், இதனை கண்டுபிடித்த ஆய்வாளருக்கு பேஸ்புக்நிறுவனம் சார்பில் வெகுமதி வழங்கப்படும். | zoomquilt : இந்த வெப்சைட் மட்டும் ஓபன் ஆனா நீங்க ஆடி போயிருவீங்க - சும்மா போய் பாக்கறீங்களா.?

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top