மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் !!!
  • 11:49AM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:49AM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

என்னடா, கல்யாணம் பண்ணின பிறகு பொண்டாட்டி எதைச் செஞ்சாலும் திட்டறாளேன்னு புலம்பற கணவனா நீங்க???  அப்போ இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.  முதல்ல பொண்டாட்டியை புரிஞ்சுகிட்டா, அப்புறம் வாழ்க்கை செம்ம ஜாலியா மாறிடும்.  

01. அன்பாகவும், பிரியமாகவும் இருக்க வேண்டும்.

02. சுருக் சுருக்கென்று பேசக் கூடாது.

03. தேவையில்லாததுக்கெல்லாம் கோபப்படக் கூடாது.

04. கஷ்டப்பட்டு சமைச்ச சாப்பாட்டை இஷ்டப்படி கலாய்க்காம, குறை சொல்லாம பக்குவமா எடுத்துச் சொல்லனும்.

05. யாராயிருந்தாலும் சுயமரியாதை கண்டிப்பா இருக்கும்.  அதுவுமில்லாம கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கண்டிப்பா வேணும்.  அதனால, நிறையப் பேரு பார்க்கிற மாதிரி திட்டக் கூடாது.

06. அடுத்தவங்க முன்னாடி எந்தச் சூழ்நிலையிலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

07. பேமிலி பங்ஷன் இல்லாட்டி உங்க லைப்ல முக்கியமான பங்ஷனாயிருந்தா, அவங்களுக்கும் அதை நேரில பார்க்கனும்னு ஆசை இருக்கும்.  அவசியம் கூட்டிட்டுப் போகனும்.

08. குடும்பத்துல பிரச்சினைன்னு வந்தா பாதிக்கப்படப் போறது ரெண்டு பேரும்தான்.  அதனால, ரொம்பத் தியாகியாகாம மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

09. மனைவி பேசும் போது குறுக்கிடாம, சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் ஒரு கருத்தைச் சொன்னா அதை ஆதரியுங்க. சில இடங்களில் தவறாகவோ அல்லது ஆதரிக்க முடியாதுன்னு தோணுச்சுன்னா ஏன்-னும் அவங்களுக்கு புரிய வையுங்க.

11. புதுசா எதாச்சும் – ரங்கோலி, சமையல், மெகந்தி, பொட்டீக் இப்படி எதைச் செஞ்சாலும் ரசிச்சுப் பாராட்டனும்.  முடிஞ்சா அதுல உங்களுக்கு என்ன தோணுதுன்னும் வெளிப்படையா பேசுங்க.

12. பணம் தேவைதான்.  அதை விட முக்கியம் குடும்பம்னு நினைக்கிறவங்க பெண்கள்.  அதுக்கேத்த மாதிரி புரிஞ்சு நடந்துக்கனும்.

13. எப்போ பார்த்தாலும் வீட்ல மத்த ப்ராப்பர்ட்டி கூட ஒரு ப்ராப்பர்ட்டி மாதிரி இருக்கக் கூடாது.  கொஞ்சமாச்சும் ப்ரீயா பேச வேண்டும்.  

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. வருஷத்துக்கு ஒரு முறையாவது வெளியூர், சுற்றுலா அந்த மாதிரி கூட்டிட்டுப் போகனும்.

16. பசங்களை பெத்தோமா, சம்பாரிச்சோமான்னு இல்லாம, அவங்க வயசு படிப்பு இதெல்லாம் பற்றி கொஞ்சமாச்சும் அக்கறை காட்டிப் பேச வேண்டும்.

17. வெளிப்படையா இருக்கனும்.  சின்ன விஷயம்தானேன்னு மறைச்சு வச்சுக்கக் கூடாது. 

18. தேவையில்லாம சந்தேகப்படாம, மனைவியை முழுசா நம்ப வேண்டும்.

19. முக்கியமான விஷயங்கள்ல அவங்களும் பங்கெடுத்துக்க ஆசைப்படுவாங்க.  அதனால, முக்கியமான விஷயம்னு இருந்தா கண்டிப்பா மனைவியிடம் கூற வேண்டும்.

20. பெண்களுக்கு தங்கள் அழகு மீது எப்பொழுதுமே தனி கர்வம் உண்டு. அதை டேமேஜ் பன்ற மாதிரி பேசவோ, அவங்க கண்ணு முன்னாடி என்ன பொண்ணுடா இவ என்ற ரியாக்‌ஷனில் அடுத்த பெண்களைப் பார்க்கக் கூடாது.

21. பிடிச்சிருக்குன்னு கல்யாணம் பண்ணிகிட்டு, பின்னால இதை விட பெட்டரா இருந்தான்னு சுத்தக் கூடாது.   

22. நமக்கு வலிக்கிற மாதிரித்தான் அவளுக்கும்னு புரிஞ்சு நடந்துக்கோங்க.  நாள் பூரா வேலை செஞ்சா அவங்களுக்கு வர்ற சோர்வு, நமக்கு ஸ்டிரெஸ்ஸா மாறிடும். 

23. உடம்பு சரியில்லைன்னா அலட்சியம் காட்டாம கூட இருந்து கவணிங்க.  அதுதான் உங்களுக்கு அவங்க மேல என்ன அக்கறை இருக்குங்கிறதுக்கு அளவுகோல்.

24. பெண்களுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்கும்.  அதை உங்களால முடிஞ்ச அளவு நிறைவேத்துங்க…

25. பெருசா இல்லாட்டியும் கொஞ்சம் சின்னதாக் கூட உதவி செய்யனும்னு நினைக்கனும்.  ஒரு ஆள் வேலை செஞ்சிட்டே இருக்கும் போது இன்னொரு ஆள் சும்மாவே இருந்தா கண்டிப்பா கடுப்பாகும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை‘ என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் நம்மளை மட்டுமே நம்பி முன்னப்பின்ன தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறாள்.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.  மனைவியின் முன்னுரிமை கணவனின் உடல்நலமே.

29. வீட்டிற்கு வர இயலாது, சாப்பாடு வேண்டாமென்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவி, குழந்தைகளின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது போன்ற தீயபழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.  சுயமா சம்பாரிக்கனும்னு ஆசைப்பட்டா போக விடுங்க.

38. சுதந்திரம் கொடுக்க வேண்டும்.  அவங்களுக்குன்னு சில விஷயங்கள் செய்து கொள்ளவும், நண்பர்களுக்கும் அவங்களுக்கும் Personal Space தேவை. அதைக் கொடுங்கள்.  நீங்க அவங்களுக்குக் கொடுக்காத Personal Space அவங்ககிட்டயிருந்து எதிர்பார்த்தா எப்படி???

39. கெட்ட பழக்கங்களை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நிலை கெடுமளவுக்குப் போனால், கண்டிப்பாகத் திட்டு வாங்கித்தான் ஆக வேண்டும்.

40. கத்துவது பலனளிக்காது.  புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். எவ்வளவுகெவ்வளவு சாந்தமாக ஒரு விஷயத்தை அணுகுகிறீர்களோ, அவ்வளவு விரைவாகப் பிரச்சினை முடியும்.

41. சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்தும்போது கொஞ்சம் சர்பிரைஸ் கலந்து குடுக்கனும்.  அதிலயும், முக்கியமான நாட்களை ஞாபகம் வச்சுகிட்டு நீங்க சர்பிரைஸ் குடுக்க குடுக்க உங்க மேல நம்பிக்கை ஜாஸ்தியாகிட்டே போகும்…

அப்புறம் என்ன, வாழ்க்கை ரொம்ப ஜாலியாய்டும்… என்ஜாய்… 

Top