குழந்தைகள் எதைச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது…
 • 06:32AM Nov 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 06:32AM Nov 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

குழந்தைகள் பச்சைக் களிமண் போன்றவர்கள்.  அவர்கள் தங்களுக்குப் புதிதாக, அல்லது சுவாரஸ்யமாகத் தோன்றும் அனைத்தையும் செய்தோ, பேசியோ பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.  இது இல்லாமல் நான் ஏற்கெனவே சொன்ன ஜீன் பதிவுகளின் படி, அடுத்தவரை தன் ஆளுமைக்குள் கொண்டுவர சில விஷயங்களைத் தன்னிச்சையாகச் செய்யும்.  அதைக் கண்டு கொண்டு உடனடியாகச் சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  அப்படித் தவறும் பட்சத்தில், அந்தக் களிமண் இறுகிவிட்டால் பிறகு அதே அவர்களது குணங்களில் ஒன்றாகிப் போகும். 

 1. தொலைக்காட்சியில் பெரிய மனிதர்களைக் கேவலப்படுத்துவதைப் பார்த்து அதே போல குழந்தைகள் பேச முற்பட்டால், அது தவறு என்பதைப் பக்குவமாகப் பேசிப் புரிய வையுங்கள்.
 2. குழந்தைகள் தோளில் ஏறி உட்கார்வது, விளையாடுவது சகஜம்தான் என்றாலும், அது அடிக்கடி நிகழ்ந்தால் அனுமதிக்காதீர்கள்.  அவன் உங்களை டாமினேட் செய்ய ஆசைப்படுகிறான் என்பதன் மறைமுகப் பொருள் அது.  தோளின் மீதே எந்நேரமும் உட்கார்வது, இடுப்பிலேயே உட்கார்வதெல்லாம் உங்கள் டாமினேஷனை நீங்கள் அறியாமலேயே விட்டுக் கொடுக்கும் செயல்.
 3. தேவையில்லாமல் அழ அனுமதிக்காதீர்கள்.  வருத்தமாக இருந்தால் உங்களிடம் வந்து உங்களை கட்டிப் பிடிக்கச் சொல்லுங்கள்.  இது நாளடைவில் உங்களிடையே எந்த இரகசியமும் இல்லாத அளவுக்கு நெருக்கம் அதிகரிக்க வழி செய்யும். தனியே அழுது பழகினால், நெகட்டிவ் எண்ணங்களும் – கட்டிப் பிடித்து அழுதால், பாசிட்டிவ் எண்ணங்களும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.
 4. அதிகமாகக் கத்திப் பேச அனுமதிக்காதீர்கள்.  இதுவும் டாமினேட் செய்வதில் ஒரு வகைதான். “If you want to control an Alpha, Bite its ears…” என்பார்கள்.  கடிப்பது என்றால் உண்மையிலேயே கடிப்பது அல்ல.  அந்த அளவுக்கு சப்தமாகப் பேசுவது. வீட்டில் நீங்கள்தான் ஆல்ஃபா என்பதைப் பதிய வையுங்கள். இல்லையென்றால், ஒவ்வொரு படியாக மேலேறி ஒரு கட்டத்தில் குழந்தை வைப்பதுதான் வீட்டில் சட்டம் என்று மாறிவிடும்.
 5. கெட்ட வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு பெரிய நோ சொல்லுங்கள்.  அது தமிழ், ஆங்கிலம் எந்த மொழியாக இருந்தாலும். தற்போதைய சூழலில் எப்படியாக இருந்தாலும் பழகிக் கொள்வார்கள் என்றாலும் வீட்டில் இந்த வார்த்தைப் பிரயோகம் இருக்காது என்பதுடன், இது தவறு என்பதும் அவர்கள் மனதில் பதிந்து விடும்.
 6. “நீ கேர்ள்தான போய் வீடு கூட்டு…”, “நீ பாய் தான…” போன்ற வசனங்களுக்கு ஸ்ட்ரிக்டாக ரியாக்ட் பண்ணுங்கள்.  அப்படி எதைச் செய்ய பாகுபாடு பேசினார்களோ அதையே அவர்களைச் செய்ய வையுங்கள்.
 7. ஒரு குறிப்பிட்ட வயது வரை தனியறையில் இருந்தால் தாளிடுவதை அனுமதிக்காதீர்கள்.  தனிமையில் குழந்தைகள் எத்தனை சீக்கிரம், எதையெல்லாம் கற்றுக் கொள்ளும் என்பதை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. 
 8. தனியறை இல்லாமல் ஒரு அறையில் தான் குடும்பமே என்றால், எக்காரணம் கொண்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விழித்திருக்க அனுமதிக்காதீர்கள்.  விழித்திருந்து பழகினால் நாளை உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையில் நடப்பதை நீங்களறியாமலே கவணிக்கும் வாய்ப்பு உண்டு.  இன்று இந்த நிமிஷம் டெல்லியில் 4 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு 4 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.  உண்மைக் காரணம், அவனது பெற்றோர்கள்.

குழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டியவை எப்படி அவசியமோ, அதை விடவும் அவர்களை எதைச் செய்ய விடக் கூடாது என்பதும் மிக அவசியம்.  இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top