காதலுக்கு உத்தரபிரதேசம் செய்த மரியாதை..!!!
  • 06:35AM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 06:35AM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடம் தாஜ் மஹால்.உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லுகின்றனர் இதில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் இருபது லட்சம் .அண்மையில் உத்தரபிரதேச அரசு அம்மாநிலத்தின் சுற்றுலா தளங்களின் பதிவேட்டை வெளியிட்டுள்ளது அதில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் தரும் வகையில் காதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் இடம் பெறவில்லை.

 Taj mahal.jpg

     உத்தரபிரதேச மாநிலம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாகும். அங்குப் பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் பல உள்ளது.யோகி ஆதித்யநாத் அவர்கள் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஒரு பயணக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பிரசித்தி பெற்ற பல ஸ்தலங்கள் இடம் பெற்றுள்ளது.ஆனால் அதில் தாஜ்மஹால் இடம் பெறவில்லை. காசி மற்றும் மதுராவை இணைத்துள்ளனர் இந்தக் குறிப்பில் அயோத்யாவை இணைத்ததற்கான காரணம் தெரியவில்லை.

yogii.png

       இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.பலரும் ஆவலுடன் பார்க்கவரும் தாஜ்மஹால் இல்லை என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் இது குறித்து அவர் கூறுவது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.தாஜ்மஹால் இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்றும் பகவத் கீதை மற்றும் ராமாயணம் தான் இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

            உலக அதிசயம் என்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டாலும் ஒரு இஸ்லாமிய மன்னரால் கட்டப்பத்து என்ற ஒரே காரணத்தால் இதை ஏற்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்படியே சென்றால் போகிறபோக்கில் பச்சை நிறமே இருக்கக் கூடாது என்றும் காவி நிறம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top