#RESERVEBANK: முற்றிலுமாக நிறுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு!!! வங்கிகளை நோக்கித் தள்ளப்படும் மக்கள்!!!
  • 16:31PM Oct 14,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:31PM Oct 14,2019 Chennai

பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக 2016-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு DEMONETISATION-ஐ அறிவித்தது. சில தினங்களுக்குப் பிறகு அவர்களாகவே DIGITAL TRANSACTION-களை ஊக்குவிப்பதற்காக, DIGITAL INDIA என்ற திட்டத்தின் கீழ் இதைச் செய்ததாகவும் அதே மத்திய அரசு கூறியது. ஆனால், அப்போது 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து, DEMONETISATION-னால் ஏற்பட்ட பலன்கள் பாதிக்கப்படும் என்று பொது மக்கள் கண்டித்தும், புழக்கத்தில் விட்டது மத்திய அரசு.

பழைய கதையெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா??? இந்த வருடத் துவக்கத்தின் போது 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை RESERVE BANK நிறுத்திவிட்டதாகத் தகவல்கள் வெளியான போதும், அந்தத் தகவல்களை மத்திய அரசு திடமாக மறுத்துவிட்டது. இதையடுத்து, THE NEW INDIAN EXPRESS DAILY NEWSPAPER சார்பில் RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு RESERVE BANK  இந்த FINANCIAL YEAR-ல் 2000 ரூபாய் நோட்டுக்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்துள்ளது. நிஜமாகவே DIGITAL INDIA-வுக்காகத்தான் இந்த நடவடிக்கை என்றால், அச்சிடுவதை நிறுத்தியதை மத்திய அரசும், RESERVE BANK-ம் ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விஷயம் இல்லாமல் இல்லை. DEMONETISATION சமயத்திலேயே நிறையப் பெரிய CORPORATE முதலாளிகளின் கடன்கள் WRITE-OFF செய்யப்பட்டு அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது போக NPA POLICY-களில் செய்த மாற்றத்தின் காரணமாக NPA எனப்படும் NON PERFORMING ASSETS வேறு 3,75 லட்சம் கோடிகளிலிருந்து, கிட்டத்தட்ட 9 லட்சம் கோடி உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. BANK-களே திவாலாகி விட்டதாகச் சொல்லி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேறு BANK MERGER திட்டங்கள் தீட்டி, அது BANK EMPLOYEES-ன் பெரும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சம்பாதித்தது. பொருளாதார நிலையோ அதை விட. இந்நிலையில், மக்களின் பணத்தை எல்லாம் BANK-களுக்குத் திருப்பி விடுவது யாருடைய லாபத்திற்காக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருக்காதா பின்னே, 1,70,000 கோடி ரூபாயை மத்திய அரசு RESERVE BANK-கிடம் இருந்து பெற்றது எதற்காக என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆக மொத்தம், மக்கள் சிறுகச் சிறுக சம்பாதிப்பதை எடுத்து CORPORATE-களுக்கு கொடுப்பதற்காக நடக்கிற STUNT என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர். இல்லாவிட்டால், ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்வியும் நியாயமாகத்தான் தோன்றுகிறது. என்ன செய்ய???

KYC Update  |  RTI in Hitlist  |  Farmers Loan Waiver  |  2000 Print Stopped  |  Resigning Governors  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top