#SOCIALSECURITY: TECH GADGETS-ஐ விடுங்க!!! 2K KIDS தொலைத்த பல விஷங்கள் என்னவென்று பார்க்கலாமா???
  • 20:37PM Dec 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:37PM Dec 02,2019 Chennai

TECH GADGETS என்னதான் பட்டையைக் கிளப்பும் விதமாக இருந்தாலும், மற்ற காலத்தில் குழந்தைப்பருவத்தில் அனுபவித்த நிறைய விஷயங்களை இன்றைய 2K KIDS-க்கு இல்லாமல் போயிருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களாக இருந்தாலும், அதை அனுபவித்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், மனதில் என்றும் நீங்காத பசுமை நினைவுகளாக இன்னும் பலரது மனதில் அவைதான் இருக்கிறது. அப்படி 2K KIDS அனுபவிக்காத விஷயங்களைப் பார்க்கலாமா???

kids.jpg

#1. வீட்டைச் சுற்றிலும், மரங்கள். அதில் விளையாட நண்பர்கள். ஏறி, இறங்கி அடிபட்டு, மண்ணை அப்பிக் கொண்டு கவலையில்லாமல் விளையாடுவது.

#2. தெருவில் உள்ள எந்த வீட்டுக்குள் வேண்டுமானாலும் போய் விளையாடும் வசதி. அம்மா குரல் கேட்கும் வரை.

#3. விளையாடும் போது கடந்து போகும் நபர் பரிவுடன் தலையைக் கோதுவது, கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் போவது போன்ற சந்தோஷங்கள்.

#4. BUS-ல் பயணம் செய்யும் போது, யார் மடியில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு பயணம் செய்ய முடியும். அவர்களும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டு வருவார்கள்.

#5. LEAVE விட்டால், சொந்தங்கள் எல்லாரும் ஒரு வீட்டில் இணைந்து, LEAVE-ஐயே திருவிழாவாகக் கொண்டாடுவது.

#6. ஈர முத்தங்கள். சொந்தங்கள் முத்தம் கொடுக்கவும் சங்கடப்பட்டதில்லை, வாங்கிக் கொள்ளவும் சங்கடப்பட்டதில்லை.

#7. நண்பர்களின் காக்காக்கடி கடித்த மிட்டாய்கள். HYGIENE எல்லாம் நண்பர்களுக்குக் கிடையாது. சட்டைக்குள் வைத்து, ஒரே கடி. SHARE செய்து சாப்பிடுவது.

#8. விளையாடுவதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. ஊர் மொத்தமும் இஷ்டம் போலச் சுற்றி வரலாம். மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை.

9. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Kids Snacks  |  Sony Aibo  |  Kids Speech  |  Meme Kids  |  Kids Vaccine  |

#SOCIALSECURITY நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், குறிப்பிட்ட இந்த விஷயங்களைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. நம்முடைய SOCIAL SECURITY. இன்றைய குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களின் மனதிலும், நிறைய விஷயங்களைத் திணித்து வைத்திருக்கிறோம். நம்முடைய பயத்தாலும், சமூகத்தின் மீது நாம் காட்டிய அலட்சியத்தாலும். குழந்தைகளை யாரிடமும் போகக் கூடாது என்று சொல்லி வளர்க்குமளவுக்கு மாறியிருக்கிறோம். திரும்ப அந்தக் காலம் வருமா???  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top