Misc

கடன் விபரங்களில் 'மஞ்சள் நோட்டீஸ்' விடுவது என்கிறார்களே அப்படியென்றால் என்ன? வக்கற்று போனால் கூட இதை மட்டும் செய்ய கூடாது!

Oct 27 2020 11:38:22 AM

கடனாளி திவாலாகி விட்டால், கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்புவது தான் மஞ்சள் நோட்டீஸ். ஒருவரின் சொத்துமதிப்பை விட கடன் சுமை அதிகமாகிவிட்டது, இனி தொழில் செய்து கடனை அடைக்கும் சூழலிலும் அவர் இல்லை எனும் போது, கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். சிலர் அதிரடியான செயல்களில் இறங்குவதும் உண்டு. இந்த இக்கட்டான சூழலில் கடனாளி நீதிமன்றத்தை நாடி, தனது சொத்து விபரங்கள் எல்லாவற்றையும் தெரிவித்து, கடன் தொல்லையில் இருந்து விடுபடும் முறையே மஞ்சள் நோட்டீஸ் விடுவது! இப்படி மஞ்சள் நோட்டீஸ் அனுப்புவரை நீதிமன்றம் இறந்துவிட்டவராக கருதும். கடனுக்கு பிறகாவது புதிய மங்களகரமான வாழ்வை வாழட்டும் என்று தான் மஞ்சள் நிறத்தை தேர்ந்தெடுத்தார்களாம். 

yellow-notice RBI

நீதிமன்றமானது, கடன் வாங்கியவர் சமர்ப்பித்த சொத்துவிபரங்களை விசாரித்து, அந்த சொத்துக்களை ஏலத்தில் விட்டு அதில் வரும் தொகையை கடன் கொடுத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும். மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பவருக்கு இதற்கு பின்னர் கடன் தொல்லை இருக்காது. ஆனால் இதற்கு பின்னர் அவர் வங்கி அல்லது கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற முடியாது. இதனால் எதிர்காலத்தில் அந்த நபரது குழந்தைகளுக்கு தேவையான கல்விக்கடன், தொழில்கடன் எல்லாம் வாங்க தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். 

yellow-notice RBI

குறிப்பிட்ட நபர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவர் என்றால், யாரும் கடன் கொடுக்க முன்வர மாட்டார்கள். ஏனெனில் பணத்திற்கு உத்தரவாதம் கிடையாது. திருப்பி செலுத்தாவிடினும் நீதிமன்றத்தை நாட முடியாது. தனியார் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் அவருக்கு கடன் கொடுக்க முனையாது. அந்த நபரது குடும்பமே சமூக அந்தஸ்தை இழந்துவிடும். நடிகர் டி.ஆர். மகாலிங்கம் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.