மன அழுத்தம் என்றால் என்ன???
  • 05:18AM Sep 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 05:18AM Sep 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணர்கின்றனர் , அச்சமயம் அவர்களின்  உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அவர்களின் அழுத்தத்தைப் போக்கும் அளவிற்குச் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். ஆனால், இந்த நிலை தொடர்ந்தால், அது மன அழுத்தமாக மாறிவிடும்.

000e8d04-800.jpg

இன்றைய உலகம் நிற்பதற்குக் கூட நேரம் இல்லாமல் வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது.அனைத்துத் துறையிலும்  உள்ள எல்லாப் பணி நிலைகளிலும்,பணிபுரியும் அனைவரும் ஒருவிதமான மன அழுத்தத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

poster54big.jpg

அலுவலகத்தில் ஏற்படும் பணிச்சுமை தான் அழுத்தம் வருவதற்கான ஒரு முக்கிய காரணம் ஆகும்.தேவையற்ற சிந்தனைகளே அழுத்தத்திற்கான காரணமாகும்.நம்மால் முடியும் என்று எண்ணுவதை விட்டு நம்மால் முடியாதோ? என்று நாம் தேவையற்று யோசிப்பதனால் நாம் ஒரு விட அழுத்தத்திற்கு உள்ளாகிறோம்.நாம் வாழும் சுற்றுச்சுழலும் ஒரு வகை காரணம் ஆகும்.  நாம் இருக்கும் சமூகம் மிகவும் சத்தமானது அந்த இடத்தில் ஏற்படுத்தும் சத்தம் நாம் காணும் காட்சிகள் போன்ற பலவற்றால் கூட அழுத்தம் உண்டாகிறது. தனக்கு உடல்ரீதியான குறைகள் இருக்குமோ என்ற பயத்தினால்கூட அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

pjimage (15).jpg

தேவையற்ற சிந்தனைகளை குறைப்பதே அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.வேலைப் பளுவை சுமப்பதற்குப் பதில் அதற்கேற்ப திட்டம் வகுத்து செயல் பட வேண்டும்.கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் செலவிடலாம்.ஆண்டுக்கு இரண்டு முறையாவது சுற்றுலா சென்று வரலாம்.டீ மற்றும் காபி குடிப்பதைத் தவிர்க்கலாம். மனம் விட்டு நம்முடைய கவலைகளை பகிர்ந்தாலே போதும் பாதி அழுத்தம் குறைந்துவிடும்.

pjimage (16).jpg

வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் சிரித்து வாழ்ந்தாலே போதும் அழுத்தம் வருவதற்கான வாய்ப்பே இல்லை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top