திமுக கூண்டோடு இராஜினாமா செய்தால் என்ன ஆகும்???
  • 09:11AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:11AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

       நெடுநாளாக நெட்டிசன்களிடையே வலம் வரும் ஒரு கேள்வி, “ஏன் இவ்வளவு நடந்த பிறகும், திமுக தன் எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்வதன் மூலம் தெரிவிக்கக் கூடாது” என்பதே… அதுவும் நேற்று 18 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்ட பிறகு, அனைவரின் ஒட்டுமொத்த கவனம் திமுகவின் முடிவின் மீதுதான் இருக்கிறது.  அனைவரும் அது என்ன செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், திமுக நேற்று கூட்டிய கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற முடிவான தகவல் இல்லை.  ஒருவேளை நெட்டிசன்களின் ஆசைப்படி திமுக மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூண்டோடு இராஜினாமா செய்தால் என்ன நடக்கும்???

       இந்த நிமிடம் வரை சட்டசபை மெஜாரிட்டி எடப்பாடி அரசுக்குத் தான் உள்ளது.  அதாவது 117 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.  ஒரு சட்டசபை நடப்பதற்கு வெறும் 24 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதும்.  சட்டசபை துவங்கப்பட்ட காலம் முதல் மாற்றப்படாமல் இருக்கும் இந்தச் சட்டத்தால், ஆளும் அரசுக்கு பெரிய மாறுதல் என்று எதுவும் ஆகிவிடப் போவது இல்லை… ஏற்கெனவே எதிர்க்கட்சி இருந்தபோதும், அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றி, நீட் முதலியவற்றுக்கான சட்ட வரையறைகள் கொண்டு வரப்பட்டன.   தற்போது இவர்களும் இராஜினாமா செய்துவிட்டால், 117 எம்எல்ஏக்கள் தங்கள் இஷ்டப்படி எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும், எதற்கும் அனுமதி அளிக்க முடியும் – என்ன வேண்டுமானாலும் குறைதந்தபட்ச எதிர்ப்பு கூட இன்றி, இன்னும் மூன்று வருடங்களுக்குச் செய்ய முடியும். 

       இராஜினாமா செய்வது மக்களுக்குத் திமுக மீதான அபிப்ராயத்தைக் கூட்ட உதவுமே தவிர, இதனால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் நிகழப் போவதில்லை.  உண்மையில், எதிர்மறையான நிகழ்வு மட்டுமே நிகழும்.  இதற்கு நேரிடையாக தமிழிசையை முதல்வராக்கி விடலாம்.  ஏனெனில், எந்த ஒரு சட்டமும், மெஜாரிட்டி உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்றப்படும்.  117 என்பதே மெஜாரிட்டிதான்.  தற்போதைய சூழ்நிலையில் எப்படிப் பார்த்தாலும் 19 காலி இடங்களைக் கொண்டு திமுகவினாலும் மெஜாரிட்டி காட்ட முடியாது.  சபாநாயகரின் அரசியல் சார்பு பற்றிக் கேள்விகளே இல்லை.  இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு இன்று வரவிருக்கும் இரண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் இருக்கிறது. 18 பேரின் தகுதி நீக்கம் தற்காலிகமாகவாவது செல்லாது என்பது ஒன்று, சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது இரண்டு, அதிலும் திமுகவின் 21 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லாது என்றும் அறிவிக்கும் பட்சத்தில்.

       எது எப்படியாயினும், மக்களுக்குத்தான் மரியாதையில்லை என்றால், மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளுக்குக் கூட மரியாதை இல்லை என்பது உண்மையில் ஜனநாயகமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top