#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா???
  • 15:47PM May 25,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:47PM May 25,2019 Chennai

கோடைக்காலம் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போவது போல இருக்கிறது. வழக்கமாக இந்நேரம் ஒரே ஒரு முறையாவது மழை பொழிந்திருக்கும். ஆனால், இதுவரை அப்படி நடக்கவில்லை. அதனால், இன்னும் வாட்டப் போகும் கோடைக்கு எந்த வகையான உணவுப் பொருட்கள் நல்லது என்பதைப் பார்ப்போம்.

#1. கோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, மோர், தயிர் போன்றவை. இவற்றில் CALCIUM, VITAMIN D ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு வலிமை கொடுக்கிறது.

#2. ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான VITAMIN C நிறைந்துள்ளது. இது BLOOD SUGAR அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், கோடைக் காலத்தில் ஏற்படும் உடலின் நீர்ப் பற்றாக்குறையைச் சரி செய்கிறது.

#3. கோடைக் காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கில் அதிக அளவு VITAMIN B, C, IRON, CALCIUM, SODIUM, MAGNESIUM, POTTASIUM, ACIDS மற்றும் PROTEIN-கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதுடன் வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.

#4. வெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டியவற்றில் PEACH பழங்களும் ஒன்று.

#5. இளநீர் அருந்துவதனால் வயிற்றுப் பிரச்சனை, DIABETES, BLOOD PRESSURE, உடல் வறட்சி, உடல் கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளைச் சரி செய்ய முடியும்.

#6. குடைமிளகாய் அதிகப்படியான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக VITAMIN C, CAROTENOIDS, FIBRE ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

#7. FIBRE, VITAMIN C நிறைந்துள்ள STRAWBERRY சாப்பிடும்போது, IMMUNITY அதிகரிக்கும்.

#8. LITCHI பழங்கள் அதிகப்படியான நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளது இந்த பழங்கள் கொடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

#9. வெள்ளரியில் CALORIE-கள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடை குறைக்க உதவுவதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களையும் கொடுக்கிறது.

#10. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  Beware of Curd  |  Fake Sugar  |  Benefits of Dry Grapes  |  Fruits And Empty Stomach  |  Benefits of Kiwi Fruit  |

#SUMMERFRUITS என்னென்ன என்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. கோடை என்றாலே முதலில் பாதிக்கப்படுவது, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துதான். மற்றவை உடலை, குறிப்பாகத் தோலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவும். புரிகிறதா???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top