Misc

#bold: ஆடையற்ற புகைப்படம் அல்லது வீடியோவை வைத்துக்கொண்டு ஒருவன் மிரட்டினால், பெண் என்ன செய்ய வேண்டும்?

Sep 22 2020 06:36:12 AM

குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், அடிக்கடி இளம்பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கேள்விப்பட முடிகிறது. காரணம் என்னவென்று பார்த்தால், ஒரு காதலித்து ஏமாற்றியது இல்லையென்றால் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டி, ஆசைக்கு இணங்க வைப்பது பின்னணியில் இருப்பதை அறிய முடிகிறது. இந்த மாதிரியான விவகாரங்களில் பெண்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பயம் தான் எதிரிகளின் ஆயுதம்.

photo picture internet

ஓ போட்டோ வச்சுருக்கியா டா! உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ என்று சொல்லிப்பாருங்கள். அதிக பட்சம் சோஷியல் மீடியாவில் போடுவாங்களா? போடட்டுமே. நிர்வாணத்தை நினைத்து ஏன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு செல்ல வேண்டும். அதிகபட்சம் ஒரு மாதம் பரவும். பிறகு இருந்த இடம் தெரியாமல் போகும். அதற்காக நாம் இருந்த இடம் தெரியாமல் போகும் அளவுக்கு ஏன் முடிவெடுக்க வேண்டும்? அடுத்தவரின் உடலை அனுமதியின்றி கேவலமாக சித்தரிக்கும் இழி பிறவிகளே உயிரோடு இருக்கும் போது, நீங்கள் ஏன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும்?

photo picture internet

மிரட்டல் வருகிறது என்று தெரிந்தாலே, பெற்றோரிடம் தைரியமாக சொல்லுங்கள். பெற்றோருக்கு தெரியக்கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும், மிரட்டுபவனுக்கு சாதகமாக அமையும். முதல் மிரட்டல் வந்த உடனே காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். அதன் மூலம் எந்த எண்ணில் இருந்து வருகிறதோ, எந்த சோஷியல் மீடியா ஐடியில் இருந்து வருகிறதோ அவர்களை ஆதாரத்துடன் மடக்கிப்பிடிக்க முடியும். பிரச்சனையை சுமுகமாக முடிக்கலாம் என்று பேச்சு வார்த்தையில் இறங்குவதே நாம் செய்யும் முதல் தவறு.

photo picture internet

ஒருவரை மிரட்டி அடைய வேண்டும் என்று ஒருவன் முடிவெடுத்துவிட்டால், எல்லா இடத்திலும் அவன் புத்தி அப்படித்தான் வேலை செய்யும். துணிந்து நீங்கள் எடுக்கும் முடிவு, அடுத்தடுத்து உங்களைப்போன்ற பல பெண்களின் வாழ்வை காப்பாற்றும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆபாச தளத்தில் பதிவிட்டால் கூட, அதனை நீக்கும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து அடிப்பதே, இது போன்ற குற்றங்கள் அரங்கேறுவதை குறைக்கும்.