கார்ப்பரேட்டிசம் என்ன தந்தது???
  • 05:57AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 05:57AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… இந்த வார்த்தை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இன்றைய கார்ப்பரேட்டிசத்திற்கு நன்கு பொருந்தும்.  இன்றைய இளைஞர்களிடம் கேட்டால் கார்ப்பரேட்டிசம் மொபைல் தந்தது, ஜீன்ஸ் தந்தது, இலவச 4ஜி தந்ததென அடுக்கக் கொண்டே போவார்கள்.  அவையெல்லாம் நிஜம்தானா???

கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பார்க்கும் முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான்.  அவர்கள் வியாபாரிகள். சந்தை ஏற்படுத்துதல். சந்தைப்படுத்துதல் இவை மட்டுமே அவர்களது குறிக்கோள். இதற்கு நம் நலனையோ, நம் குழந்தைகள் நலனையோ கார்ப்பரேட் சார்பில் வைப்பது நம்மை எவ்வகைப்படுத்தும் எனச் சிந்திக்கவும். உண்மையில், இன்று அனைத்து மேல் தட்டு மக்கள் அல்லது மேல் தட்டு என நினைத்துக் கொண்டு அவ்வாறே நடித்துக் கொண்டும் இருக்கும் மக்களின் விருப்பமான அசைவ உணவகம், 15 ஆண்டுகளுக்கு முன் இந்திய தர நிர்ணய கட்டுப்பாடுகளின்படி மக்கள் உண்ணக் கூடாத உணவாக தடை செய்யப்பட்டதை எத்தனை பேர் அறிவார்கள்???

அதிக பால் சுரப்பதாக கார்ப்பரேட்காரர்களின் பாசமாக அன்பளிப்பு இன்று நாட்டு மாடுகளின் அழிவிற்கும், சர்க்கரை, மலட்டுத்தன்மை ஆகியவற்றை நீங்காத நோய்களாகப் பரிசளித்தது எத்தனைப் பேருக்கு தெரியும். இலட்சக்கணக்கான ஆண்டுகள் எவெலயூஷனைத் தாக்குப் பிடித்து இன்று உலகில் வாழும் வைரஸ்களைத் தாண்டி, புதிய  வைரஸ்கள் எப்படி உருவாகும் என எவராவது சிந்தித்திருக்கிறீர்களா??? 2 ரூபாய் கடலை மிட்டாயை உண்பது கேவலம் என்று விட்டுவிட்டு, அதே கடலையை சாக்லேட் கலவையில் பொடித்துத் தூவி, வண்ணக் காகிதத்தில் அடைத்ததும், 30 ரூபாய்க்கு வாங்கித் தின்பது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்பது புரியவில்லை.

இவைகளைக் கூட விட்டு விடலாம்.  ஒரு காலத்தில் தனித்தனியாகத் தயாரிப்பு நடந்தது. மூலப்பொருட்கள் குப்பையில் கொட்டப்பட்டது, பூமியால் செரிமானம் செய்யப்பட்டது.  இன்று ஒரே இடத்தில் நடக்கும் தயாரிப்புகளால், பல இடங்களில் கொட்டப்பட வேண்டிய குப்பை ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அவை பூமியால் செரிமானம் செய்ய முடியாமல், நோய்பரப்பிகளாக மாறி வருவதும் இவர்களது கை வண்ணமே.  அமெரிக்காவின் கார்ப்பரேட் வணிகத்தில் முதன்மையானது ஆயுத உற்பத்தி. இன்று புவி வெப்பத்தின் நேரடி காரணகர்த்தா இது என்று கூடச் சொல்லலாம்.  ஆனாலும், அவற்றை விட இவர்களால் எந்நாளும் முடியாது.

இன்றும் உடல் எடை கூட்ட, குறைக்க என கார்ப்பரேட்கள் புதிது புதிதாய் பொருட்களைக் கொண்டு வந்து கொண்டேதான் இருக்கிறது. தேநீரில் பூரண உடல்நலம் என்று கூட சத்தியம் செய்கிறார்கள்.  அவர்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top