வந்தது கவர்னரா, கவர்னர் ஆட்சியா???
  • 11:53AM Oct 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:53AM Oct 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

       பன்வரிலால் ப்ரோஹித். காலைல கண்ணு முழிச்சதே இவர் முகத்துலதான்.  டி,வில எந்தப் பக்கம் திருப்பினாலும் “ஓராண்டிற்குப் பிறகு புதிய கவர்னர்” னு விடாம இவரைத்தான் காட்டிட்டிருக்காங்க… ஏற்கெனவே அம்மா மர்ம மரணம் விசாரணைக்குப் போன உடனே அப்போதைய ஆக்டிங் கவர்னர் வித்யாசாகர் ராவ் டக்குன்னு வெளியே போனது மக்களுக்கு ஏதோ மணியடிச்சாலும், இப்போ திடீர்னு புது கவர்னர் எதுக்குன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க… நாம வேற சும்மா இருக்காம பல்லி சகுனம் சொன்ன மாதிரி, “இதுக்கு நீங்க ஆட்சியைக் கலைச்சிருக்கலாம் முதல்வரே” ன்னு பதிவு வேற போட்டுட்டோம்.  போற போக்க பார்த்தா அதில சொன்ன மாதிரி கவர்னர் ஆட்சி நடக்கிறதுக்கு வாய்ப்பு பிரகாசமாயிருக்கிற மாதிரித்தான் தோணுது. 

       பாஜக-வை என்ன சொன்னாலும், அவங்கவங்க கட்சியைத்தான் அவங்கவங்க வளர்த்தனும்னு ஆசைப்படுவாங்க… நம்பிப் பின்னால போனவங்க தப்பு… அப்படி என்னாச்சுன்னு கேக்குறீங்களா??? சொல்றேன்.  இப்போ ஏற்கெனவே கொசுறு எம்.எல்.ஏக்களை நீக்கி, கரெக்டா 118 தான் இருக்காங்க… இப்போ நம்ம செயல் தலைவர் போட்டிருக்கிற வழக்குப் பிரகாரம் பன்னீர் செல்வம் உட்பட 19 பேரை, ஏற்கெனவே இருந்த 18 பேரைத் தகுதி நீக்கம் செஞ்ச மாதிரி நீக்கம் செய்யச் சொல்லியிருக்காங்க.  சபாநாயகரோட அந்தத் தீர்ப்பு சரின்னா, இந்தத் தீர்ப்பும் சரிதான்.  ஒருவேளை அப்படி நீக்கப்பட்டா, அதிமுகவோட பலம் 99. மற்ற கட்சிகளை விட மெஜாரிட்டி ஆனாலும், பிஜேபி கவர்னர் ஆட்சியை அமுல்படுத்தறத யாராலும் தடுக்க முடியாது. 

       தடுக்கனும்னா, அதுக்கு திமுக வோட ஆதரவு வேணும்… திமுக தயாரா இருக்கும், ஆனா வாங்கினா, அப்புறம் இஷ்டப்படி ஆட்சி நடத்த முடியாது.  வாங்கலைன்னாலும், மெஜாரிட்டி காமிக்க முடியாம அதிமுக அரசு அடிவாங்கும்… முதல் விஷயம் நடந்தா, கண்டிப்பா இதுவரைக்கும் போட்ட ரெய்டு எல்லாம் கேசு ஆய்டும்… இரண்டாவது திமுக சொன்னபடி கேக்கலைன்னாலும் அவங்களும் இத்தனை நாள் சட்டசபையை விட்டு வெளியே துக்கி வீசிட்டு, இவங்க பாட்டுக்கு சட்டங்களைக் கொண்டு வந்ததுக்கெல்லாம் பழி எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. சோ, இன்னைக்கு தப்பிச்சா போதும், இன்னைக்கு தப்பிச்சாப் போதும்னு கரெக்டா முட்டு சந்துக்கு வந்துட்டாங்க…

       ஒரு வேளை கோர்ட்டு எதுக்கு சிக்கல்னு அந்த 18 பேரு மீதான நடவடிக்கை செல்லாதுன்னு அறிவிச்சுடுச்சுன்னா, அப்புறம் ஆளுங்கட்சி தரப்புக்கு சிக்கல்தான்.  ஏன்னா, அப்போ சபாநாயகரோட நடுநிலைமைன்னு அடுத்த கேஸ் போட்ருவாங்க… 2016 செப்டெம்பர் மாசத்துல இருந்து எப்படி எப்படியோ கெஞ்சியும், கேட்டும் வராத கவர்னர், இப்போ கேக்காம வந்துருக்காருன்னா அதுக்கு ஒரே அர்த்தம்தான் இருக்க முடியும்… அடுத்த 6 மாசத்துக்கு பாஜக-வுக்கு தமிழகத்தை குத்தகைக்கு கொடுத்துட்டோம்னு அர்த்தம். கொஞ்சமே கொஞ்சூண்டு யோசிச்சிருக்கலாம்… நல்லா இருங்க…

       எனிவே, புதிய கவர்னருக்கு வாழ்த்துகள்…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top