இப்படை வெல்லும்...
  • 12:12PM Oct 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:12PM Oct 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்தியாவில் இன்று பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை துவங்கவுள்ளது.இந்தியாவில் முதல் முறையாகச் சர்வதேச கால்பந்து போட்டி நடக்கவுள்ளது என்பதால் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 ronald.jpg

உலகில் அதிகமான கால்பந்து ரசிகர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு நான்காவது இடம்.இங்கு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் சமீபகாலமாகக் கால்பந்தின் மேலுள்ள ஈர்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் ISL வந்த பிறகு பட்டித்தொட்டியிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

  messi.jpg

கால்பந்து உலகக்கோப்பை நம் நாட்டில் நடப்பது இங்குள்ள கால்பந்து வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

 FiFA.jpg

முதல் முறை நடப்பதால் எந்த ஒரு தவறும் நடக்கக்கூடாது என்பதில் விளையாட்டுத் துறை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறது.இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் மட்டுமே விளையாட அனுமதி அளித்துள்ளது.ஐந்து முறை பட்டம் வென்ற நைஜீரியா அணியின் மோசடி வெளியே தெரிந்துள்ளதால் விளையாடும் அணைத்து வீரர்களின் வயதைத் தனிக்கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.

 

கால்பந்தில் இந்தியாவிற்கென்று ஒரு இடம் இல்லை என்றாலும் சமீபகாலமாக நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய அணி முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளது.இருபது வருடத்திற்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.முன்னதாக 1956 ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடம் பிடித்ததே உலக அரங்கில் இந்தியாவின் சாதனையாகும்.

indian-football-.jpg

கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரித்துள்ள இந்த நிலையில் கால்பந்திற்கான உலகக்கோப்பை நம் நாட்டில் நடப்பது மற்ற விளையாட்டு வீரர்களுக்கு நல்ல ஊக்கமாக இருக்கிறது.காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற்ற போது பல வீரர்கள் வெளிச்சத்திற்கு வந்ததைப்போல் இந்தமுறையும் பல புதிய வீரர்கள் வெளிவருவார்கள் என்று நம்பப்படுகிறது.கால்பந்து மட்டுமின்றி இதைப் போல் மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவித்தல் நாம் அனைத்து விளையாட்டுகளிலும் புதியதோர் சகாப்தம் படைப்போம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top