Exquisite

நீங்க குடிக்கும் தண்ணீரில் தாதுபொருட்கள் இருக்கிறதா என்பதை அறிய எளிய வழி..! RO போன்ற டெக்னாலஜி செய்வது என்ன?

Apr 24 2018 06:14:35 PM

சில ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி  நீர் தான் குடிநீராக இருந்தது.உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தாதுக்களும் அதில் அடங்கியிருந்தது. ஆனால் இப்போது? நீரை காசு கொடுத்து வாங்கி பருகுகிறோம்.இந்திய வருவாயில் நீராது முக்கிய வணிக பொருளாக மாறிவிட்ட நிலை.எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்குமோ? காசு இருப்பவன் கடையில் வாங்கி குடிப்பான்.இல்லாதவன் ? 
பசியால் வாடும் போது நீரை அள்ளி குடித்தால் தற்காலிக பசியாறும்.ஆனால் இப்போது அந்த நீருக்கும் வழி இல்லை எனும் போது சித்தர்களை போல
காற்றை குடித்தே வாழ வேண்டும் என்ற நிலைஉருவாகிவிடுமோ என்ற அச்சம் சூழ்ந்துள்ளது.
 
 
 
கார்பரேட்டுகளின் அமோக வணிகம் இங்கு விளம்பரங்கள் மூலமாக சுமுகமாக அரங்கேறுகிறது. படித்தவன் முதல் பாமரன் வரை எப்படியெல்லாம் விளம்பரம் செய்து ஏமாற்றலாம் என்பதை தெளிவாக திட்டம் போட்டு செயல்படுபவர்கள் அவர்கள்மட்டுமே.
நீங்க விற்கும் நீரில் தாதுப்பொருள் இருக்கா என யாராவது படித்த ஜீவிகள் கேட்டு விடுவார்களோ என்று படித்தவனை சரியாக ஏமாற்றும் வகையில் விளம்பரங்கள் நடக்கிறது.
 
 
இந்தியா முழுவதும் பாட்டிலில்,கேனில் விற்கப்படும் தண்ணீரில் தாதுபொருட்கள் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பொருத்தமான விடை. RO மற்றும் IV டெக்னாலஜி மூலம் நீரில் உள்ள தாதுபொருட்கள் பிரிக்கப்பட்டே விற்பனைசெய்யபடுகிறது.
 
சரி இப்போது வளர்ந்து வரும் நகரங்களில் இது போன்ற தண்ணீரை தானே பயன்படுத்துகிறார்கள்.இதை மீண்டும் சக்தி மிகுந்த குறைந்த பட்ச தாதுபொருட்கள் உள்ள நீராக மாற்ற ஒரு சில வழிமுறைகள் உள்ளன.இதை செய்வதன் மூலம் கோடையில் வரும் தொற்றுகளை குறைக்கலாம்.
மிளகு  -25 கிராம்,சீரகம் -25 கிராம்,வெந்தயம் -25 கிராம், தேத்தாங் கொட்டை ஒன்று, வெற்றி வேர் தேவையான அளவு.இவைகளை ஒரு துணியில் கட்டி தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.
 
 
இது இயற்கையான நீர் சுத்திகரிப்புமுறை அதுமட்டுமின்றி சக்தி மிகுந்தவை.கண்ட கண்ட பானங்களை வாங்கி குடித்தால் தான் உடலுக்கு சக்தி கிடைக்கும் என்பதை  100%நம்பும் நாம் நமது முன்னோர்கள் சொன்ன இயற்கை வழிமுறைகளை 50% நம்பினாலே போதும் அந்நிய கார்பரேட்டுகளின் வணிகம் கணிசமாக குறையும்.