Misc

இதை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்க கூடாதா ? என்ன இப்படி சொல்லிட்டீங்க நாங்கள் எல்லாம் சொம்பு முழுக்க குடிப்போமே!

Apr 30 2021 07:20:00 PM

சாப்பிட்டு முடித்த உடனே தண்ணீர் பருக கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் நாம் உணவை சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கழித்த பிறகே போதுமான அளவு நீரை பருக வேண்டும். மாறாக சாப்பிட்டு முடித்த கையோடு தண்ணீரை குடித்தால் அது செரிமான பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து விடும்.

water-drinking peanut-eating

இது ஒரு பக்கம் இருக்கட்டும். வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வேர்க்கடலையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வேர்க்கடலையை சாப்பிட்ட உடன் கண்டிப்பாக நீங்கள் தண்ணீரை பருகக்கூடாது. மீறி பருகுவதால் நமக்கு இரத்த குழாய்களில் கொழுப்புகள் படியும். மேலும் இருமலும் தொண்டை எரிச்சலும் உண்டாகும்.

water-drinking peanut-eating

வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தண்ணீரை குடித்தால் அது நமது வயிற்றில் உள்ள PH அளவை பாதிக்கும் என்றும் அதன் காரணமாக செரிமான கோளாறுகள் உண்டாகும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே இனிமேல் வேர்க்கடலை சாப்பிட நேரிட்டால் சாப்பிட்டு முடித்த உடன் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவைப்பட்டால் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து நீரை குடியுங்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது கழித்து தண்ணீர் பருகுவது நல்லது.