Misc

இது என்னடா வார்னருக்கு வந்த சோதனை! சன் ரைசர்ஸ் அணியில் ஏற்பட்ட மாற்றத்தால் வார்னர் ரசிகர்கள் ஏமாற்றம்!

May 01 2021 07:40:00 PM

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறார். வார்னருக்கு முன்னர் வில்லியம்சன் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்தார். எப்போது அணியின் கேப்டனாக வார்னர்  செயல்பட ஆரம்பித்தாரோ  அப்போது முதலே வில்லியம்சன் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

warner williamson captain

வில்லியம்சன் அணியில் விளையாடாமல் இருக்க வெறும் வார்னரை மட்டும் குறை சொல்லக்கூடாது. சன் ரைசர்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் எப்போதும் அதிக அளவில் இருப்பார்கள். அவர்களில் யாரை விளையாட வைப்பது, யாரை உட்கார வைப்பது என நிறைய பிரச்சனைகள் வரும். அதன் காரணமாகத்தான் வில்லியம்சன் அணியில் எடுக்கப்படவில்லை. இத்தனை வருடங்களாக சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்ததால் யாரும் வில்லியம்சன் அணியில் விளையாடுவதைப் பற்றி கேள்வி கேட்கவில்லை.

warner williamson captain

ஆனால் இந்த வருடம் சன் ரைசர்ஸ் அணியின் நிலைமை மோ சமாக உள்ளது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் வெறும் ஒரு போட்டி மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆறு போட்டிகளும் எளிதில் வெற்றி பெரும் சூழ்நிலையில் தான் அணி இருந்தது. சன் ரைசர்ஸ் அணி வீரர்களின் மோ சமான ஆட்டத்தால் இந்த நிலையை அடைந்துள்ளது. ஒருவேளை இந்த ஆறு போட்டிகளிலும் வில்லியம்சன் விளையாடி இருந்தால் கண்டிப்பாக அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்தில் இருந்திருக்கும்.

warner williamson captain

தொடர் தோ ல்விகள் காரணமாக அந்த அணியின் கேப்டன் பொறுப்பை வார்னரிடம் இருந்து வில்லியம்சனுக்கு அணி நிர்வாகம் வழங்கி இருக்கிறது. இது ஒரு வகையில் சன் ரைசர்ஸ் அணிக்கான நல்ல முடிவாக இருந்தாலும் வார்னர் ரசிகர்களை இந்த முடிவு சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

warner williamson captain