கள்ளகாதலால் முண்ட போர்-டிராய் நகரை அழித்த மரக்குதிரை
  • 11:32AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:32AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

Image result for trojan horse

 

மஹாபாரதம்,ராமாயணத்தைப் போன்று கிரேக்கர்களுக்கு இலியட்,ஒடிஸி என்ற இரண்டு புராணங்கள் மிகமுக்கியமானவை.அவர்களது வரலாற்றைக் கூறும் இந்த இரு புராணங்களை பள்ளியில் பயிற்றுவிக்கின்றனர்.தனிமனித வாழ்க்கை சிறப்பாக அமைய அவை உதவுவதாகக் கற்பிக்கப்படுகிறது.

 இலியட் என்ற புராணத்தில் ஒரு மிகப் பெரிய மரக்குதிரை இடம் பெரும்.ஹெலன் ஆஃப் டிராய் என்ற கிளைக்கதையில், ஸ்பார்ட நகருக்கு சென்ற டிராய் நகரின் இளவரசர் பாரிஸ், ஸ்பார்டன் மன்னரின் மனைவியான ஹெலேனாவை காதலித்து தன்னுடன் டிராய் நகருக்குக் கடத்திவந்துவிடுவார்.

 

ஹெலேனாவை மீட்டுவர ஸ்பார்டன் மன்னர், டிராய் மீது படை எடுத்துச் சென்றார்.டிராய் நகருக்குள் நுழைய முடியாத சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர்.10 வருடங்கள் நீடித்த இந்தப் போர்,பின்பு டிராய் நகர மக்களின் முட்டாள்தனத்தால் தோற்கடிக்கப்பட்டது.

Image result for troy war

கிரேக்க வீரர்கள் இரவோடு இரவாக, தங்களிடம் இருந்த ஆயுதங்களையும், கப்பல்களையும் உபயோகித்து ஒரு மிகப்பெரிய மரக்குதிரையை வடிவமைத்தனர்.அந்தக் குதிரைக்குள் நூற்றுக்கணக்கான வீரர்கள்  ஒளிந்து கொண்டனர்.கிரேக்கர்களின் படகுகள் அனைத்தும் டிராய் நகரின்  மற்றொரு பகுதியில் மறைவாக நிறுத்தப்பட்டன. இதை அறியாத டிராய் மன்னார்,கிரேக்கர்கள்  தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு அந்த மரக்குதிரையை பரிசளித்தாக எண்ணி டிராய் நகருக்குள் அதை கொண்டுவந்தனர் Image result for trojan horse

ஆனால் இரவு நேரத்தில் அந்த மரக்குதிரைக்குள் இருந்த வீரர்கள் வெளியில் வந்து டிராய் நகரின் கோட்டை கதவைத் திறந்தனர்.நகருக்குள் புகுந்த கிரேக்க வீரர்கள் டிராய் நகரையே தீக்கிரையாக்கினார்.பெண்ணுக்காக மண்ணைவிட்ட மன்னர்களின்  கதைகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top