#Vasthu : சுவர் கடிகாரத்தை வீட்டில் எந்த திசையில் மாட்டினால் அதிர்ஷ்டம் ?
  • 16:54PM Jun 17,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 16:54PM Jun 17,2019 Tamil Nadu

நமது வாழ்க்கையில் இழந்தால் மீண்டும் பெற முடியாதது என்று சில விஷயங்கள் உண்டு அதில் முக்கியமானது  நேரம்தான். இந்த உலகத்தின் அனைத்து அசைவுகளையும் நிர்ணயிப்பது நேரம்தான். நம் அனைவரின் வீட்டிலுமே இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் என்னவென்றால்  அது கடிகாரம்தான். இப்பொழுது பெரும்பாலானோர் போனில் நேரம் பார்ப்பதைத்தான் பழக்கமாக கொண்டுள்ளனர்.வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டடங்கள் கட்டும் முறை மட்டுமின்றி அதில் உள்ள பொருள்கள் பற்றியும் கூறும்  ஒரு விஞ்ஞான கலையாகும். அந்த வகையில் வீட்டில் மாட்டப்படும் சுவர் கடிகாரங்கள் பற்றிய வாஸ்து சாஸ்திர விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

clock1.jpg

சுவர் கடிகாரங்களை வீட்டில் மாற்றுவதற்கும் சில வாஸ்து விதிகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றி கடிகாரங்களை வீட்டில் மாட்டி வைப்பதால் நமது வீட்டில் நேர்மையான சக்திகள் நிலைத்திருக்கும்.மதிப்பு மிகுந்த நேரத்தை காட்டும் கடிகாரம் வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் வீட்டில் மாட்டும் திசை உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கும் ,

clock2.jpg

வீடாக இருந்தாலும் சரி கடையாக இருந்தாலும் தெற்கு திசை பார்த்ததாக இருக்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் வாஸ்து சாஸ்திர படி தெற்கு திசை எதிர்மறை ஆற்றல்கள் அதிகமிருக்கும் திசையாகும். எனவே கட்டிடத்தின் தெற்கு திசை சுவரில் ஒருபோதும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய மூன்று திசைகளிலுமே கடிகாரத்தை மாட்டலாம். இதனால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

clock3.jpg

அதேபோல சுவர்கடிகாரங்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறங்களில் இருக்குமானால் நேர்மறையான சக்திகளை வீட்டிற்குள் ஈர்க்கும்.வாசலின் மேல் எப்பொழுதும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. அதேசமயம் வாசற்கதவை பார்க்கும் படியும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதனால் உங்கள் வீட்டிற்குள் நுழையும் நேரமாய் ஆற்றல்கள் திரும்பி செல்ல வாய்ப்புள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top