Rainforest

என்னதான் அதிர்ஷ்டமே அடித்தாலும் அது சில தத்திகளுக்கு பயன்படுவதில்லை என்பது இந்த விஷயத்தில் மிகவும் பொருத்தமாக தான்யா இருக்குது!

Apr 19 2021 09:43:00 PM

2013ம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படமாக அமைந்தது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இந்த படம் கருதப்படுகிறது.

vvs-jai

இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாய் நடித்திருந்தார். அறிமுகமான முதல் படமே ஸ்ரீதிவ்யாவிற்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிவா- ஸ்ரீதிவ்யா ரொமான்ஸ் காட்சிகளும் சிவா- சூரி இடையிலான நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

vvs-jai

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முதன்முதலில் நடிகர் ஜெய்க்குதான்  வாய்ப்பு கிடைத்தது. படத்தின் இயக்குனர் பொன்ராம் ஜெய்யிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் என்ன காராணத்தினாலோ இந்த படத்தில் நடிக்க ஜெய் மறுத்து விட்டார். அதன் பிறகே சிவகார்த்திகேயனை அணுகி கதையை கூறி அவரை நடிக்க வைத்துள்ளார் பொன்ராம். இந்தப்படத்தில் ஜெய் நடித்திருந்தால் அவருடைய மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும். ஆனால் அவர் அந்த வாய்ப்பை மறுக்கவே அந்த அதிர்ஷ்டம் சிவகார்த்திகேயனை நோக்கி சென்றுவிட்டது.