Shoreline

இப்படி சட்டம் கொண்டுவருவது சரிப்பட்டு வருமா? எல்லா நாடுகளும் இதை மட்டும் கடைபிடித்தால் உலகம் எங்கோ சென்றுவிடுமே!

May 19 2021 06:18:00 PM

ஓட்டுப் போடுவது என்பது எல்லோருக்கும் உள்ள உரிமையாகும். மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வளர தொடங்கிய காலத்தில் இருந்து மக்கள் ஓட்டுப்போட்டு தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இதிலிருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் 100 சதவீத ஓட்டுப் பதிவை எட்டுவது என்பது பல நாடுகளுக்கும் பெரும் சவாலான ஒரு விஷயமாகும்.

viting-australia

ஒரு சில நாடுகளில் ஓட்டுப்போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் 100 சதவீத ஓட்டுகள் எல்லா நேரங்களிலும் பதிவாவதில்லை. ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கியுள்ள நாடுகளில் ஒன்றுதான் ஆஸ்திரேலியா. இங்கு ஒருவருக்கு 18 வயது நிறைவடையும் பட்சத்தில் அவருக்கு ஓட்டுப்போடும் தகுதி வந்துவிடும். ஓட்டுப்போடும் தகுதி பெற்ற எல்லா குடிமக்களும் கட்டாயம் தங்கள் ஓட்டுகளை போட வேண்டும் என்பது ஆஸ்திரேலியாவில் இருக்கும் விதிமுறையாகும்.

viting-australia

தவிர்க்க முடியாத காரணத்தை தவிர வேறு ஏதாவது காரணம் சொல்லி ஓட்டுப் போடுவதை யாராவது தவிர்த்தால் அவர்களுக்கு 20 டாலர் அபராதமாக விதிக்கப்படுகிறது. இரண்டாவது முறை இந்த தவறு செய்யும் பட்சத்தில் அபராதம் 50 டாலர்களாக அதிகரிக்கப்படும். அபராதத்தை கட்ட தவறும் மக்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து விடுவார்கள். பிறகு வாகனம் ஓட்டுவது சிரமமாக மாறிவிடும். இந்த சட்டத்தின் மூலம் ஓரளவுக்கு கணிசமான அளவில் வாக்குப்பதிவை உறுதி செய்ய முடிகிறது என்பது ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் நம்பிக்கை.

viting-australia