#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர்? மருத்துவரின் அதிர்ச்சி பதில்?
  • 21:10PM May 24,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:10PM May 24,2019 Chennai

பேருந்தில் எங்காவது பயணம் செய்ய நேரிடும் போது எதிர்பாரா விதமாக வாந்தி வருகையில் உடனே அதனை கட்டுப்படுத்தும் விதமாக மனநிலையை மாற்றும் வாசனையை நுகர்வோம், மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம்.. இந்த மாதிரி பலவற்றை கையாண்டாலும் சரி இல்லையேல் வாந்தியை கட்டுப்படுத்த முடியாமல் வெளியேற்றிவிட்டாலும் நல்லது ஆனால் கையை வைத்து மட்டும் வாயை அடைத்து கட்டுப்படுத்த முயலாதீர்கள். உயிரே போகும்..

அப்படி ஒரு பதற வைக்கும் சம்பவம், 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது..படுக்கையில் வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என தம்பியுடைய வாயை தன் கையால் அடைத்தவாறு குளியலறைக்கு அழைத்து சென்றுள்ளான் அண்ணன். தம்பி வாந்தி எடுத்து முடித்த பின்னர் அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது,நொடி பொழுதில் அவனுடைய உயிர் பிரிந்து விட்டது...

மருத்துவ பரிசோதனையில், தம்பியுடைய வாயை அடைத்ததால் வாந்தி நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும்பாதைக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு சிறுவன் மரணித்துவிட்டான்.

இனி குழந்தைகளுக்கு வாந்தி வந்தால் உடனே எடுக்கவையுங்கள்..இடம்,துணி,மெத்தை,இருக்கை வீணாகும் என வாயை அடைத்தவாறு நீண்ட நேரம் செல்ல வேண்டாம்..பொது இடமோ ,வீடோ அசுத்தமானால் சுத்தம் செய்திடலாம் ஆனால் குழந்தையின் உயிர் ? பெரும்பாலான பெற்றோர்கள் பேருந்தில் வாந்தி எடுப்பதை தடுக்க இது போன்று செய்வதுண்டு,இனி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top