#Twitter : ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன் செய்த ட்விட்! பிரச்னை மகளிர் ஆணையம் வரை சென்றுள்ளது!!
  • 17:35PM May 21,2019 Mumbai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 17:35PM May 21,2019 Mumbai

1994 ஆம் ஆண்டு உலக அழிகியாக பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினத்தின் தமிழ் படமான இருவர் படத்தில் அறிமுகமானார் பிறகு அவர் பாலிவூட்டில் நுழைந்து பல வெற்றி படங்களில் நடித்தார்,ஒரு காலத்தில் இளைஞர்களின்  கனவு கன்னியாக திகழ்ந்தார்

Aishwarya-Rai.jpg

அப்பொழுது ஐஸ்வர்யா ராய்  நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே (லிவிங்  டுகெதர்) ஒன்றாக வசித்து வந்தனர்,சிறிது காலத்தில்  சல்மானிடம் ஏற்பட்டகருத்து வேறுபாட்டை  தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் சல்மான்கானை விட்டு பிரிந்தார் . இதனைத் தொடர்ந்து அப்போது பிரபலமாக இருந்த நடிகர் விவேக் ஓபராயை ஐஸ்வர்யா ராய் காதலித்ததாக கூறப்பட்டது.

aish.jpg

விவேக் மற்றும் ஐஸ்வர்யா  ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் இவர்களின் நெருக்கத்தை கூறுவதாக இருந்தது,பிறகு  திடீரென அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

WhatsApp Image 2019-05-21 at 5.30.21 PM.jpeg

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் என்று கூறப்படும் விவேக் ஓபராய் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது. ஆனால் அந்த ட்விட்டில் உள்ள பிரச்சினை என்னவென்றால் ஐஸ்வர்யா ராயின் காதல் லீலைகளை அம்பலப்படுத்தும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது.இந்த ட்விட்டால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து  ஒரு பெண்ணின் மானத்தை வைத்து புகைப்படத்தை வெளியிட்டதாக விவேக் ஓபராய்க்கு பெண்கள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share This Story

துரை முருகன்

Top