Lushgreen

சாமி படப்பிடிப்பின் போது விவேக் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Sep 09 2021 05:47:00 PM

சாமி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம் ஒரு நபர் நடிகர் விவேக்கிடம் வந்து சார் நீங்க எங்க வீட்டுக்கு வந்து என் கூட காபி சாப்பிடுறீங்களா? என்று கேட்டுள்ளார். விவேக்கும் இதுல என்னங்க இருக்கு, வாங்க போய் காபி சாப்பிடலாம் என்று அவருடன் வீட்டுக்கு கிளம்பிவிட்டார். வீட்டுக்கு வாங்க என்று சொன்ன நபருக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது.

vivek samy movie shooting

காரணம் விவேக்கெல்லாம் நம்ம வீட்டுக்கு எங்க வரப்போறாரு என்கிற நினைப்பில் கூறி இருக்கிறார். அவருடைய வீட்டில் விவேக் உட்காருவதற்குக் கூட சேர் இல்லையாம். விவேக் அவரின் வீட்டிற்கு சென்று தகரடப்பாவில் அமர்ந்துகொண்டு காபியும், பஜ்ஜியும் சாப்பிட்டாராம். நீங்க இந்த அளவிற்கு ஏழ்மையான நிலையில் இருந்தும் என்னை நீங்கள் உங்க வீட்டிற்கு விருந்தினராக அழைத்ததற்கு ரொம்ப நன்றி.

vivek samy movie shooting

நான் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டு அவருடன் ஒரு போட்டோ விவேக் எடுத்துக்கொண்டாராம். மீண்டும் படப்பிடிப்புக்கு வந்த பின்னர் தங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு தேவையான கேன்டீன் சாப்பாடு கான்ட்ராக்ட்டை அந்த நபருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். விவேக் அந்த நபருக்கு செய்த உதவி தற்போது திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது.

vivek samy movie shooting