Rainforest

எல்லாப்புகழும் பெற்ற மாமனிதராக இருந்தாலும் கடைசியில் அவருக்கும் ஒரு ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது!

Apr 19 2021 09:46:00 PM

சின்னக்கலைவாணர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட விவேக் மாரடைப்பால் எதிர்பாராத விதமாக காலமானார். மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவர் ரஜினி, விஜய், அஜித், மாதவன், சூர்யா என்று பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள போதிலும் ஒருவருடைய படத்தில் மட்டும் இதுவரை நடித்ததே இல்லை.

vivek-kamal

உலக நாயகன் கமலஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட விவேக் சேர்ந்து நடித்ததே கிடையாது. இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்க விவேக் ஒப்பந்தமானார். இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் விவேக் நடித்துள்ள நிலையில் எதிர்பாராத விதமாக பல காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. விவேக் நடித்த காட்சிகளை படத்திற்கு பயன்படுத்துவர்களா, விவேக்கின் காட்சிகளுக்கு டப்பிங் குரல் வைத்து மேட்ச் செய்வார்களா என்று பல குழப்பங்கள் நிலவுகிறது. கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது நடப்பதற்கு முன்னரே இறந்து போய் விட்டார் விவேக்இந்தியன் 2 படம் வெளிவருவதற்கு முன்னரே விவேக் இறந்து போய் விட்டதால் அவருடைய ஆசை இப்போது நிறைவேறாமல் போனது.

vivek-kamal

இந்த ஆசை நிறைவேறாமல் போயிருந்தாலும் அவருடைய இன்னொரு ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியும். இயற்கை பாதுகாவலரான விவேக் மரங்கள் நடுவதை தனது ஆசையாகவும் லட்சியமாகவும் கருதினார். எனவே அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நாம் அனைவரும் நம்மால் முடிந்த வரை நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும்.