#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய்! இதன் பின்னணி என்ன?
  • 11:54AM Jul 15,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 11:54AM Jul 15,2019 Chennai

நேற்று கிரிக்கெட்டின் பிறப்பிடமாகக் கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இங்கிலாந்தை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவருக்கு 241 ரன்கள் எடுத்தது. இதன்பின் ஆடிய இங்கிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை போட்டியை வென்றது. 1975-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டிக்கு நடுவில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தப் போட்டி தொடங்கும் முன்பு "Vitaly Uncensored" என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட அரைகுறை ஆடையை அணிந்துகொண்டு பெண் ஒருவர் மைதானத்தில் ஓட முயற்சித்தார். இவரை மைதான காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதில் "Vitaly Uncensored" என்பது யூடியூப் பிரபலமான Vitaly Zdorovetskiy என்பவரின் ஆபாச இணையதளத்தின் பெயராகும். ஐரோப்பிய நாடுகளில் இந்த இணையதளம் அதிகளவில் பார்க்கப்படுகிறது. இந்த இணையதளத்தை உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தப் பெண் அரைகுறை ஆடையில் ஓடியுள்ளார்.

இதில் மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம், அரைகுறை ஆடையில் ஓடியவர் Vitaly Zdorovetskiy-யின் தாயார் Elena Zdorovetskiy ஆவர். மகனின் இணையதளத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கி தாய் இப்படி அரைகுறை ஆடையில் ஓடியுள்ளார். இதேபோல இவரது காதலி Kinsey Wolanski, சில மாதங்களுக்கு முன் நடந்த Champions League இறுதிப்போட்டியில் "Vitaly Uncensored" என்று பொறிக்கப்பட்ட அரைகுறை ஆடையை அணிந்து மைதானத்தில் ஓடினார். இந்தச் செய்தியை Vitaly Zdorovetskiy தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி நேற்று Elena Zdorovetskiy அரைகுறை ஆடையில் ஓடியதற்குப் பின்பு அவரது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top