"21 தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் "விஷால் ஆவேசம்..!
  • 10:30AM Mar 09,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:30AM Mar 09,2019 Chennai

"அயோக்யா’ படத்தின் ரிலீஸ் பணிகள்,கிடப்பில் இருக்கும் தயாரிப்பாளர் சங்க பிரச்சனைகள் இதற்கிடையில் திருமண வேலையகள் எனப் படு பிஸி ஆக இருக்கிறார் விஷால்.என்னதான் பிஸியாக இருந்தாலும் விஷாலின் அரசியல் ஆர்வம் மட்டும் குறைந்தபாடு இல்லை.

Image result for vishal
2017,ஆண்டு RK நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் நாமினேஷன் செய்தார்.ஆனால் இறுதி நேர கோளாறுகளால் விஷாலின் நாமினேஷன் நிராகரிக்கப்பட்டது.அதன் பின் விஷாலின் தர்மயுத்தம் தொடங்கியது.ஏமாற்றி விட்டார்கள்,மோசம் செய்துவிட்டார்கள் என்று விஷால் கூப்பாடு போட்டார்,ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.அதன் பின் "இது முடிவில்லை இனி தான் ஆரம்பம்" என்பது போல் வசனம் எல்லாம் பேசினார்.

Image result for vishal RK nagar
இந்நிலையில் சென்னையில் நடந்த நகை கண்காட்சியில் பங்கேற்ற விஷாலிடம் செய்தியாளர்கள் வரப்போகும் தேர்தல் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள்.செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,நாடாளுமன்ற தேர்தலை பற்றி இப்பொழுது கூற முடியாது என்றும் 21 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று கூறினார்.

Share This Story

Top