விசிலு பறக்கும்னு பார்த்தா, இப்போ விசிலே பறந்துடுச்சே!!!
  • 10:28AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:28AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

RK நகர் இடைத்தேர்தலில் திடீர்த் திருப்பமாக விஷால் களமிறங்கியது அனைவரும் அறிந்ததே. ஊடகங்களும், பிற கட்சிகளும் பல்வேறு யூகங்களுக்குத் தீனி போட்டு இந்த நிகழ்வைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த வேளையில், கமல் அறிவுறுத்தலில்தான் ஆழம் பார்க்க விஷால் இறங்குவதாகப் பேசப்பட்டது.  விஷாலும் விசில் சின்னம் வேண்டுமெனக் கேட்க, உடனே அனைவரும் கமலின் விசில் ஆப் உடன் ஒப்பிட்டு மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வந்தனர்.  விஷாலும் திடீரென்று காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி, அம்மா என்று அத்தனை பேருக்கும் மாலையைப் போட்டுவிட்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.  ஆம்பள படத்தில் அசால்ட்டாக தேர்தலில் வேட்பாளர்களின் மனதை மாற்றியதைப் போல மாற்றி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ…

அப்போதுதான் எதிர்பாராமல் அவருக்காகக் கையெழுத்திட்டதாக சொல்லப்படும் சுமதி மற்றும் தீபன் ஆகிய இருவரும் ஸ்லீப்பர் செல்களாக மாறி, கையெழுத்திட்டது தாங்கள் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்ததாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.  தகவல் தெரிந்ததையடுத்து, விஷால் உள்ளிருப்பு போராட்டம், ஆடியோ ஆதாரம் என்று பக்கா அரசியல்வாதியாகச் செயல்பட்டு, ஒருவழியாக RO – Returning Officer மனு ஏற்கப்பட்டதாக விஷாலிடம் சொல்லி வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். ரியாலிட்டிக்காக அங்கே கூடி இருந்த காவல் துறையினர் கூட கை கொடுத்து வாழ்த்து சொன்னதாக விஷால் சொல்கிறார்.

கதையில் எதிர்பாராத திருப்பமாக, விஷால் அன் கோ வெளியே போன சிறிது நேரத்திலேயே RO மீண்டும் வேட்புமனுவை நிராகரிப்பதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். விஷாலின் வார்த்தைகளில், “காலைலேர்ந்து சோறு தண்ணியில்லாம உட்கார்ந்திருக்கிறோம். பத்து நிமிஷம் வெளியே போய்ட்டு வர்றதுக்குள்ள, என்னாச்சுன்னு தெரியலை… நிராகரிச்சுட்டோம்னு சொல்றாங்க… இதெல்லாம் ரொம்பத் தப்புங்க…” எது எப்படியோ விஷால் மூலமா விசில் பறக்கும்னு நினைச்சா, கடைசில விசிலே பறந்துடுச்சுன்னு தான் சொல்லனும்… என்ன பன்றது, நம்ம ஊரு அரசியல் அப்படி!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top