Rainforest

இப்போ இல்லனா வேற எப்போ ? போர் ஆரம்பிக்கப்போகுது தலைவா ! நீ மட்டும் பொங்கி எழுந்துட்டா ஆட்டம் அனல் பறக்கும்

Apr 04 2021 09:47:00 PM

கொரோனா அலப்பறைக்கு நடுவில் ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளது. புது வீரர்கள், புது கேப்டன், புது ஜெர்சி என்று ஒவ்வொரு அணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். பெங்களூரு அணியை பொறுத்த வரையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மொயின் அலி, பின்ச் கழட்டி விடப்பட்டனர். மேக்ஸ்வெல், ஜேமிசன் என இருவர் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளனர். 13 வருடங்களாக கோப்பை வாங்காத அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஒன்றாகும்.

virat-kohli-rcb

இந்திய கேப்டன் விராட் கோலி ஆரம்பம் முதல் இந்த அணிக்காக தான் விளையாடி வருகிறார். பெங்களூரு அணி கேப்டனாக 9வது ஆண்டில் நுழைகிறார். கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக ஜொலித்தாலும் ஐபிஎல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பை வாங்கியதில்லை. இந்த ஆண்டாவது கோப்பை வாங்குமா என்ற எதிர்பார்ப்பில் ஆர்.சி.பி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

virat-kohli-rcb

ஒவ்வொரு ஆண்டும் போட்டி தொடங்கும் முன்பாக கோப்பை நமதே என்ற வாசகத்தை கோலி மறக்காமல் கூறுவார். இந்த ஆண்டும் அப்படித்தான் கூறியிருக்கிறார். பல திறமையான வீரர்கள் இருந்தும் இத்தனை வருடங்களாக கோப்பை வாங்காமல் இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் படு பயங்கரமான மும்பை அணியுடன் முதல் போட்டியை சந்திக்க உள்ளது பெங்களூரு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கும் கோலி தலைமையிலான ஆர்.சி.பி இந்த ஆண்டாவது கோப்பை வென்று வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.