உலகளவில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ள விராலிமலை ஜல்லிக்கட்டு!
  • 12:35PM Jan 21,2019 Viralimalai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:35PM Jan 21,2019 Viralimalai

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலகளவில் கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளது. இந்த வருடம் நடக்கவிருந்த விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள 1200-க்கும் அதிகமான காளைகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதேபோல் 500-க்கும் அதிகமான வீரர்கள் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் கலந்துகொள்வதற்காக தனித்தனி குழுக்களாக பிரிந்து பதிவு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் அதிகமான காளைகள் பதிவு செய்திருப்பதால் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் இதனை உலக சாதனையாக்குவதற்கு முயற்சித்தனர். இதற்காக கின்னஸ் சாதனை அமைப்புக்குத் தகவல் தெரிவித்து, இங்கிலாந்தில் இருந்து இந்தப் போட்டியை ஆய்வு செய்வதற்கு கின்னஸ் அமைப்பு விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்தது. இந்தப் போட்டியில் மொத்தமாக 1353 காளைமாடுகள் போட்டியிட்டதால், இதுவரை உலகளவில் எங்கும் இதனை மாடுகள் ஒரு போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை உலக சாதனையாக அறிவித்தனர். இந்தச் செய்தியை அறிந்து போட்டியாளர்களும், பொது மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இதில் சோக சம்பவமாக இரு மாடுபிடி வீரர்கள் போட்டியின் போது உயிர் இழந்தனர்.

Image result for viralimalai jallikattu

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top