#Silk Smitha : சில்க்கின் மறுபிறவி இவரா !!!
  • 02:05AM Oct 12,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 02:05AM Oct 12,2019 Tamil Nadu

80 களில் தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய  மொழிகளில் சுமார் 450ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் குறிப்பாக அன்றைய இளைஞர்கள் முதல் கிழவர்கள் வரை ஏன் இன்றுவரை நீங்கா இடம்பிடித்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் கவர்ச்சி மட்டுமில்லாது அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களின் மூலம் தனது குணசித்ர நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

silk 1.jpg

இப்படி புகழ் பெற்ற நடிகையாக வளம் வந்த சில்க் ஸ்மிதா 13/09/1996 அன்று  திடீரென தற்கொலை செய்துகொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது இன்று வரை விடை தெரியாத மர்மமாகவே உள்ளது இருந்தாலும் தனது 17 வருட சினிமா பயணத்தோடு  தனது வாழ்கை பயணத்தை முடித்து கொண்டாலும், இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா.

இந்த சூழ்நிலையில் சில்க் ஸ்மிதா போலவே ஆச்சு அசலாக தோற்றமளிக்கும் பெண்ணின்  டிக் டோக் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலர்   சில்க் ஸ்மிதா மறுபிறவி எடுத்து வந்துவிட்டாரோ என்று ஆச்சரியத்துடுன் உள்ளார்கள்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top