மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் !
  • 06:28AM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 06:28AM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்தியாவில் தற்பொழுது தீவிரவாதிகள் தொந்தரவை விடக் குற்றவாளிகள் தொந்தரவு அதிகரித்து உள்ளது..காவல் துறையினர், அரசியல்வாதிகள் இந்தக் குற்றங்களை பற்றிக் கவனிக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை..இந்த இரண்டு வருட காலத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா பின்தள்ளி உள்ளது.!

431426-rape.jpg

இந்த இரு வருடங்களாக கொலைக் குற்றங்களை விட,கற்பழிப்பு,குழந்தைகளுக்கு நடக்கும் முறைகேடு போன்றவை அதிகரித்து உள்ளது..இதில் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் உத்தர பிரதேசம் .! இதுவரை 850 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.முக்கியமான பகுதிகளிலும்,நகரங்களிலும் சர்வசாதாரணமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

நேற்று உத்தர பிரதேசம்  மாவட்டம் முசாபார்நகரில்,குடும்பத்துடன் சென்ற பெண்ணைத் துப்பாக்கி முனையில் நான்கு பேர் சித்திரவதை செய்து கற்பழித்து உள்ளனர்.அந்தப் பெண்ணின் கணவரைக் கட்டிவைத்து அடித்தும்,அவர்களின்  குழந்தையை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி  அவரைக் கற்பழித்து உள்ளனர்.இதேபோல் அங்கு மாதத்திற்கு ஐந்து முறை  பெண்களுக்கு பாதகமாக  ஒரு சம்பவம் நடைபெற்றுவருகிறது! காவல்துறையினர் இந்தக் குற்றத்தை  செய்தவர்களை கூடிய விரைவில் கண்டுபிடிப்பதாக கூறியுள்ளனர்.,மற்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கும் இதையே கூறினார்!

yogi-crime-sheet-up.jpg

பெண்களுக்கு எதிராக வடக்கு மாநிலங்களில் இது போன்று சம்பவங்கள் பெருகிவருகிறது!.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top