#The WALL : விஜய் டிவியின் புதிய கேம் ஷோ The Wall விதிமுறைகள் !!!
  • 10:05AM Oct 11,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:05AM Oct 11,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் முடிந்ததை தொடர்ந்து தனது மிகப்பெரிய கேம் ஷோ The Wall  அக்.12-ம் தேதி  களம் இறக்குகிறது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விதிமுறைகள் மற்றும் இந்த கேம் ஷோ பற்றிய விபரங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது அதனை பற்றி இப்பதிவில் பார்ப்போம்

thewall1.jpeg

The Wall  என்ற தமிழுக்கு புத்தம் புதிய கேம் ஷோவின் Format   ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் இந்த போட்டியில் ஜோடியாகக் கலந்து கொள்ள வேண்டும். நாற்பதடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவர் போன்ற டிஜிட்டல் போர்டில் விளையாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இதில் இரண்டு நபர்கள் ஜோடியாக விளையாட வேண்டும். இதில் அதிர்ஷ்டமும் அறிவும் கைகொடுத்தால்  2 கோடியே 50 லட்சம்  ரூபாயை வெல்லலாம்.இந்த நிகழ்ச்சியை ம.கா.பா ஆனந்த், பிரியங்கா  தொகுத்து வழங்குகிறார்கள்.

THEWALL.jpg

The Wall ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் போர்டு. அதன் மேல் தளத்தில்  7அடுக்குகள்  இருக்கும். அதில் எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்துகளை ஆட்டத்திற்கு ஏற்றவாறு அதிலிருந்து செலுத்த வேண்டும். அந்த பந்துகள் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள இடறுகளைத் தாண்டி கீழே வந்து விழும். கீழ் வரிசையில் பல கூடைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் பல தரப்பட்ட பரிசுத் தொகைகள் ரூபாய் ஒன்றிலிருந்து இரண்டரை கோடி ரூபாய் வரை பண மதிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.மேலிருந்து கீழ் வந்து விழும் பந்து எந்த கூடையில் விழுகிறதோ அதன்படி பரிசுத் தொகைகள் நிர்ணயிக்கப்படும்.

thewall2.jpg

இந்தப் போட்டியில் மூன்று நிற பந்துகள் அளிக்கப்படும். வெள்ளை பந்துகள் மற்றும் பச்சை பந்துகள் பரிசுத் தொகையை அதிகரிக்கும். சிகப்புப் பந்துகள் வென்ற தொகையிலிருந்து பரிசுத்தொகையைக் கழித்துவிடும். போட்டியாளர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள்  சொல்லும் சரியான மற்றும் தவறான பதில்களின் அடிப்படையில் இந்த பந்துகளின் நிறங்கள் நிர்ணயிக்கப்படும். முதல் 2 Round  மட்டுமே 2 போட்டியாளர்கள் இணைத்து விளையாட முடியும். மூன்றாவது சுற்றிலிருந்து இருவரும் பிரிக்கப்படுவர். ஒருவர் வால் முன்பு நின்றும், மற்றொருவர் தனியறையிலிருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் விளையாட்டைத் தொடரவேண்டும்.இறுதி போட்டியில் ஒரு ஒப்பந்தக் கடிதம் தனியறையில் இருக்கும் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும். அவர் அதில் கையெழுத்து இடுகிறாரா அல்லது அதைக் கிழித்துப் போடுகிறாரா என்பதைப் பொறுத்து அவர்கள் சேர்த்த பரிசுத் தொகைகளை அவர்கள் வீட்டுக்கு  எடுத்துச்செல்ல முடியும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top