Lushgreen

மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர விரும்பாத விஜய் சேதுபதி! இந்த மனசு தான் சார் கடவுள்!

Sep 09 2021 12:03:00 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். நாள் கணக்கில் சம்பளம் வாங்கும் அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறி விட்டார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்தர கதாப்பாத்திரகளில் எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார்.

vijay sethu[athy keerthi shetty

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு இவருக்கு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க படங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கில் உப்பண்ணா படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

vijay sethu[athy keerthi shetty

இந்த படம் தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக புதுமுக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருப்பார். தமிழில் ஒரு விஜய் சேதுபதி படத்தில் இவரை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க படத்தின் இயக்குனர் முயற்சி செய்துள்ளார். கீர்த்தி ஷெட்டியும் விஜய் சேதுபதி கூட நடிக்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன், எப்போ படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்குது என்று கேட்டிருக்கிறார்.

vijay sethu[athy keerthi shetty

உங்க கூட கீர்த்தி ஷெட்டியை ஜோடியாக நடிக்க வைக்கிறோம் என்று விஜய் சேதுபதியிடம் சொல்லியுள்ளனர். அதெல்லாம் முடியாது, ஒரு படத்துல அந்த பொண்ணு எனக்கு மகளா நடிச்சுருக்கு, அந்த பொண்ணுகூட நான் ஜோடி சேர்ந்து நடிச்சா நல்லா இருக்காது, ஹீரோயினை மாத்திடுங்க என்று சொல்லிவிட்டாராம். ரஜினி தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுடனே ஜோடி சேர்ந்து நிறைய படங்களில் நடித்துவிட்டார். இவர் மட்டும் ஏன் இப்படி பேசுறாரு என்று சினிமா வட்டாரங்களில் விஜய் சேதுபதி குறித்து கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.

vijay sethu[athy keerthi shetty