#Delivery டெலிவரி செய்பவர்களைச் சந்தோஷப்படுத்த இந்த வீட்டுக்காரங்க செஞ்ச வேலைய பாருங்க - வைரல் வீடியோ!
  • 18:04PM Jun 01,2020 Delaware
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:04PM Jun 01,2020 Delaware

உலகளவில் கடினமான வேலைகள் என்று கூறப்படும் சில வேளைகளில் டெலிவரி வேலையும் ஒன்று. வெயில், மழை என்று பாராமல் சரியான நேரத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கொண்டுவந்து கொடுக்கவேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து தங்களின் வேலையைச் சிறப்பாகச் செய்யும் டெலிவரி ஆட்களை மகிழ்விக்கும் நோக்கில் இந்தப் பெண்மணி ஒரு வேலையைச் செய்துள்ளார். அமெரிக்காவின் Delaware மாகாணத்தைச் சேர்ந்தவர் Kathy Ouma. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் வித்தியாசமாகக் கொண்டாட விரும்புவார்கள். அந்த வகையில் Kathy Ouma டெலிவரி செய்யும் ஆட்களுக்கு உதவும் நோக்கில் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். தனது வீட்டிற்கு முன்பு ஒரு நாற்காலி வைத்து அதில் தண்ணீர், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வைத்துள்ளார். அதன்பக்கத்தில் ஒரு பேப்பரில், UPS, USPS, AMAZON, FEDEX டெலிவரி நண்பர்கள், நீங்கள் வந்து செல்லும் போது உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் செல்லலாம். எங்களது ஷாப்பிங்கை சுலபமாகியதற்கு நன்றி என்று கூறி வைத்துள்ளார்.

#TabraizShamsi நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே...மைதானத்தில் மேஜிசியனாக மாறிய கிரிக்கெட் வீரர்!

Homeowner Leaves Snacks For Amazon Delivery Guy And His Reaction Is Too Pure

Kathy Ouma-வின் வீட்டிற்கு டெலிவரி செய்யவந்தவர்கள், இதில் இருந்து பிஸ்கட் பாக்கெட்களை எடுத்துக்கொண்டு தங்களின் நன்றியை தெரிவித்துச் சென்றுள்ளனர். Amazon டெலிவரி ஊழியர் இத்தனை பார்த்த சந்தோஷத்தில் நடனமும் ஆடியுள்ளார். இவர்கள் வந்து சந்தோசத்துடன் செல்வதை CCTV காட்சிகள் மூலம் பார்த்த Kathy Ouma அந்தக் காட்சிகளை இணையத்திலும் பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top