Exquisite

இந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்னாவது ? ஆனால் ஒன்றுமே ஆகாமல் இங்கு ஒன்று தினமும் கீழே விழுந்து விளையாடுகிறதே ! இது என்ன மாயம்

Apr 26 2021 08:25:00 AM

இயற்கை என்பதே ஒரு அதிசயம் தான். அந்த அதிசயங்களில் ஒன்றாக நம் கண்முன்னே வந்து நிற்கிறது விக்டோரியா நீர்வீழ்ச்சி. தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பெசி ஆற்றில் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா நாடுகளின் எல்லை பகுதியில் இந்த பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுலாப்பயணியான டேவிட் லிவிங்ஸ்டோன் 1855ம் ஆண்டில் இந்த நீர்வீழ்ச்சியை முதன் முதலாக கண்டுபிடுத்துள்ளார்.

victoria-falls

இந்த நீர்வீழ்ச்சிக்கு விக்டோரியா என்று இங்கிலாந்து ராணியின் பெயர் வைத்தவரும் இவரே. இந்த நீர்வீழ்ச்சி ஏற்படுத்தும் ஒலி இடிமுழக்கம் போல இருக்கும். உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படும் விக்டோரியா நீர்வீழ்ச்சி 108 மீட்டர் உயரமானது. இதனுடைய அகலம் 1708 மீட்டராக உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ள ஜாம்பெசி நதி 1000 மைல் தொலைவிற்கு ஓடி வந்து பாதாளத்தை நோக்கி கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து எழும் சாரலும், நீர்த்திவலைகளும் பெரிய புகை மண்டலம் போல காட்சியளிக்கும். இந்த காட்சியை 40 மைல் தொலைவிலிருந்தும் தெளிவாக காண முடியும்.

victoria-falls

இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால் சூரிய ஒளியின் காரணமாக எப்போதுமே இங்கு வானவில் தோன்றுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. சில சமயங்களில் இரண்டு மூன்று வானவில்களை கூட காண முடியும். பவுர்ணமி இரவு நாளில் கூட இங்கு வானவில் தோன்றுவதை காணலாம். இந்த பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து மகிழ்கின்றனர்.