மாப்பிள்ளைச் சம்பா அரிசி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா???
  • 10:44AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:44AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

எத்தனையோ சம்பா கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன மாப்பிள்ளைச் சம்பா என்று கேட்போருக்கு… தமிழ்நாட்டுல எத்தனையோ வகை அரிசி இருந்தது. நம்ம கார்ப்பரேட்காரங்க கைங்கரியத்தால, இன்னைக்கு நாம சாகுபடி செஞ்சிட்டிருந்த அரிசி வகைகளில் கிட்டத்தட்டப் பாதிக்கு மேல இழந்துட்டோம். கட்டாயம் காப்பாற்றப்பட வேண்டிய அரிசி வகைகளில் முக்கியமானது சிவப்பு அரிசி வகைகள்.  அதிலேயும் முக்கியமானது இந்த மாப்பிள்ளைச் சம்பா…

அப்படி என்ன விஷேசம் இதுல???

ஒரு காலத்துல கல்யாணம் பண்ணிப் பொண்ணு வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளைகளுக்கு இந்த அரிசியிலதான் சோறு போட்டிருக்காங்க. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளைக்கு பிள்ளை பெக்கறதுலயோ அல்லது மலட்டுத் தண்மையோ இருந்தா, இந்த அரிசி அதை சரி செஞ்சிடும்னு சொல்வாங்க.   பிரியாணிக்கு மட்டும் போட்டுப் போட்டு எப்படி பாஸ்மதிக்கு பிரியாணி அரிசின்னு பேரு வந்துச்சோ, அந்த மாதிரி இதுவும் மாப்பிள்ளைகளுக்கு மட்டும் போட்டுப் போட்டு இந்த அரிசியை மாப்பிள்ளைச் சம்பான்னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

இதுக்கு காரணம் இதுல இருக்கிற இரும்புச் சத்து. அப்புறம் அந்த நிறத்துக்குக் காரணமான ஆந்த்தோசையனின்ஸ், அடிப்படையில ஒரு நல்ல நச்சு நீக்கி.  இதுல கொழுப்பு ரொம்ப குறைவுங்கிறதால இரத்த ஓட்டம் லேசாவும், சீராகவும் பாயுது.  களையை எடுத்து நீரைப் பாய்ச்சினா, அப்புறம் வெள்ளாமைக்கு சொல்லவா வேணும்??? கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கிறவங்களுக்கும், அரிசியைக் கண்ணால கூட பார்க்கக் கூடாத சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த மாப்பிள்ளைச் சம்பா ஒரு சரியான தீர்வு.

இந்த அரிசியைப் போட்டு, நாட்டுக் கோழி அடிச்சு பிரியாணி செஞ்சு பாருங்க… அப்புறம் தெரியும் நாம இப்போ எந்த மாதிரி அரிசியை சாப்டிட்டிருக்காம்னு… இம்புட்டு விஷயம் இருக்கிற அரிசி விலை கிலோ 95க்குள்ளயே கிடைக்குது.  ஆனா, இப்படி ஒரு அரிசி இருக்கிறது நம்மள்ள எத்தனை பேருக்கும் தெரியுது??? என்ன நான் சொல்றது???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top