Lushgreen

நெல்சனும் சிம்புவும் நெருங்கிய நண்பர்களா? கோலமாவு கோகிலாவுக்கு முன்பே சிம்புவை வைத்து படம் இயக்கிய நெல்சன்!

Oct 13 2021 12:47:00 PM

நெல்சன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக உருவெடுத்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான டாக்டர் படம் திரையரங்கியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது.

director-nelson simbu-vettai-mannan

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி வருவதால் விஜய் ரசிகர்கள் டாக்டர் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை வீணடிக்காமல் நல்லதொரு படத்தை கொடுத்துள்ளார் நெல்சன். போட்டிக்கு பெரிதாக எந்த படமும் இல்லாததால் டாக்டர் படம் லாபம் கொடுத்துள்ளதாக திரையரங்க வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.

director-nelson simbu-vettai-mannan

இந்த நிலையில் நெல்சன் முதலில் இயக்கிய படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நாம் நினைப்பது போல கோலமாவு கோகிலா அவரது முதல் படமில்லை. சிம்புவின் நண்பரான நெல்சன் முதலில் அவரை வைத்து தான் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். நண்பன் கேட்டுக்கொண்டதால் சிம்புவும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

director-nelson simbu-vettai-mannan

சிம்பு மற்றும் நெல்சன் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த படம் எது தெரியுமா? பல வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு பாதியில் நின்று போன வேட்டை மன்னன் திரைப்படம் தான். சிம்பு, ஹன்சிகா, ஜெய் ஆகியோர் இந்தப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

director-nelson simbu-vettai-mannan

தற்போது சிம்பு மற்றும் நெல்சன் இருவருக்குமே நல்ல மார்க்கெட் இருப்பதால் மீண்டும் இந்தப்படத்தை கையிலெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடிக்கும் பீஸ்ட் பட வேலைகளை முடித்தபிறகு நெல்சன் மீண்டும் வேட்டை மன்னன் படத்தை மீட்டெடுப்பாரா என்று சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.