Misc

இதை சாப்பிட்டால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? சும்மா வாயில போட்டு மென்னுக்கிட்டு இருக்கறாங்க என்றல்லவா நினைத்தோம்

Apr 30 2021 08:00:00 PM

நம் பாட்டிகள் எல்லாம் அந்தக்காலத்தில் வாயில் எந்த நேரமும் வெற்றிலையை போட்டு மென்றுகொண்டு இருப்பார்கள். அது சும்மா பொழுது போக்குவதற்காக என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். வெற்றிலையின் மகத்துவம் நமக்கு தெரியாத பல விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

vetrilai-eating

கொட்ட பாக்கு கொழுந்து வெத்தலை என சும்மாவா பாடி வைத்துள்ளார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. கொழுந்து வெற்றிலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து 8 வாரங்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட்டால் உங்கள் உடல் எடையில் ஒரு மாற்றத்தை உணர முடியும். வெற்றிலை உணவை செரிக்க மட்டும் பயன்படுவதில்லை. இரைப்பை மற்றும் குடல் வலி நீக்க பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

vetrilai-eating

அசிடிட்டி அல்லது புளித்த ஏப்பம் வந்தால் குளிர்பானம் அல்லது செயற்கை ஆன்டசிட் குடிப்பதை தவிர்த்து வெற்றிலையை சாப்பிட்டு பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு உடலில் தேங்கியுள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி நமது உடலை சுத்தப்படுத்தும் அருமருந்தாக பயன்படுகிறது வெற்றிலை.